சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்


2011-08-07 போட்டா போட்டி
நடிகர்கள்:  சடகோபன் ரமேஷ், ஹரிணி,
கதை: கிராமத்து பாவாடை தாவணி நாயகிக்காக முறைப்பையன்கள் இருவரும் மோதிக்கொள்வதே கதை.  
கருத்து: கொமெடியான திரைக்கதையில் அலுப்பு தட்டாமல் படத்தை கொண்டு சென்றுள்ளார்கள்    
புள்ளிகள்:50
2011-07-30 வெப்பம்
நடிகர்கள்: நானி, கார்த்திக், நித்யா மேனன்.
கதை: வழக்கமான அன்டர் கிரவுண்ட் தாதாக்களின் கதைதான். அதில் ஒரு அப்பா-பிள்ளைகளின் மோதலையும், அண்ணன்-தம்பி பாசத்தையும், நல்ல நட்பையும், நம்பும் படியான காதலையும் கொண்ட கதை.
கருத்து: வெப்பம் ரசிகர்களுக்குச் சூடு.
புள்ளிகள்:40
2011-07-26 காஞ்சனா முனி - 2
நடிகர்கள்: லாரன்ஸ், லட்சுமிராய்,கோவை சரளா,சரத்குமார்.
கதை: ஏற்கனவே வந்த முனி திரைப்படத்தின் தொடர் கதையே இது.
கருத்து: திகில் பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி தைரியமான குழந்தைகள் வரை ரசிக்கும் படியான படத்தை கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
புள்ளிகள்:55
2011-07-23 வேங்கை
நடிகர்கள்:  தனுஷ், தமன்னா,பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன்,
கதை: மீண்டும் ஒரு வழமையான காதல் கதை.
கருத்து: அடி,தடி,கத்தி அட்டகாசம் தாங்க முடியலை.
புள்ளிகள்:30
2011-07-17 தெய்வத்திருமகள்
நடிகர்கள்:  விக்ரம், அனுஷ்கா, சந்தானம்,  பாஸ்கர், நாசர்.
கதை: மனவளர்ச்சி குன்றியவர் குழந்தையை வளர்க்க முடியாது என்று சொல்லும் சட்டத்திற்கு இடையே விக்ரமின் தந்தை பாசம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கூறும் கதை.
கருத்து: ஆறு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் பார்க்க வேண்டிய நல்லதொரு பொழுது போக்குச்சித்திரம்.
புள்ளிகள்:60

0 comments:

Post a Comment