ஒளிர்வு-(39)- தை,2014

வணக்கம்,
அனைவருக்கும் நேரம் பொன்னானது.வள்ளுவன் குறளில்
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று." என்று அதாவது பேசுவதற்கு நல்ல பல விடயங்கள் இருக்கும்போது அனாவசியப் பேச்சுக்கள் பேசுவது  -சுவை மிகுந்த கனிகள் இருக்க அதைவிடுத்து கசக்கும் காய்களை நாடுவது போன்றது, எனக் கூறுவதை நாம் நோக்குகிறோம்.அதேபோல் அனைவருக்கும் பயன்படு வகையில் பயனுள்ள விடயங்களுடன் உங்கள் நேரத்தை நற் பலனுடன் கழியும் வகையில் உங்களை சந்திப்பதில் தீபம் சஞ்சிகை மகிழ்வடைகிறது.



சிந்தனைஒளி
தை இதழ் தரும்  பொன்மொழிகள்
எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.


எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு குதியானது உங்களுக்கு ண்டிப்பாக கிடைத்தே தீரும்.


வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிகப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
*******************************************


0 comments:

Post a Comment