சினிமா- பயனுள்ள செய்திகள்

                                                  விஜய் டபுள் ரோலில் நடிக்கிறாரா?
'துப்பாக்கி' ஹிட்டுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்.
சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்'எதிர்நீச்சல்' சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு 'வாள்' என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது இல்லையாம்.
'அதிரடி', 'வாள்' என்று படத்துக்கு டைட்டில் வைக்கவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கிறோம் என்று படக்குகுழுவினர் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தில்  விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
ஆக்ஷன் ஹீரோ, காமெடி ஹீரோ என இரு வேடங்களிலும் பட்டையக் கிளப்பப் போகிறாராம்.
'தலைவா', 'ஜில்லா' படங்களில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பன்ச் வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறதாம்.
வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறதாம்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சீயான் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து இயக்கி வரும் படம் . இப்படத்தின் பெரும்பகுதியை படமாக்கி விட்ட ஷங்கர், இப்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். படத்தின்
வில்லன் கேமரா கண்களுக்கு அதிகம் பரிட்சயமாகாதவராக இருக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர், பல மாத தேடல்களுக்குப்பிறகு சிவாஜிகணேசனின் மூத்த மகனான ராம்குமாரை தன் கதைக்கு சரியான வில்லன் கிடைத்து விட்டார் என்று உற்சாகத்தோடு கமிட் பண்ணினார்.
 அப்பா சிவாஜி, தம்பி பிரபு ஆகியோர் பெரிய நடிகர்கள் என்றபோதும், சினிமாவில் பிரபு நடித்த அறுவடைநாள் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே நடித்த அனுபவம் ஏற்கனவே இருந்ததால், ஷங்கர் கேட்டுக்கொண்டதும் உடனே சம்மதம் சொன்னார் ராம்குமார். அதையடுத்து விக்ரம்-எமி சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்வேறு அயல்நாடுகளுக்கு சென்று மாதக்கணக்கில் நடத்தி வந்த ஷங்கர், இப்போது வில்லன் போர்ஷனை படமாக்கி வருகிறார்.
அதனால், கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அரிதாரம் பூசி, அதிரடி வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் ராம்குமார். நடிப்பு ரத்தத்தில் ஊறிப்போன விசயம் என்பதால், வித்தியாசமான வில்லனாக, மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ஸ்பாட்டை கலக்கிக்கொண்டிருக்கிறாராம் ராம்குமார்.அவரது நடிப்பைப்பார்த்து அடுத்து அதிரடி வில்லனாக பீல்டை ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்கள்.
நாசரின் வாரிசும் நடிக்க வந்துவிட்டார்!
இது வாரிசுகளின் காலம். இப்போது நாசரின் மகன் லுப்துபுதீனும் நடிக்க வந்துவிட்டார். விஜய் டைரக்ட் செய்யும் சைவம் படத்தில் நாசரின் பேரனாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவருக்கு பாஷா என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய். இதுபற்றி டைரக்டர் விஜய் கூறியிருப்பதாவது:

என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு ஒரு கேரக்டர் இருக்கும். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை ஜீவனுள்ள கேரக்டராக மாற்றிவிடுவார். சைவம் படத்தில் கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் கேரக்டரில் நாசர் நடிக்கிறார். அவரது பேரனாக நடிக்க பலபேரை ஆடிசன் செய்தும் திருப்தி வரவில்லை. நாசரின் சாயல் கொஞ்சமாவது இருக்க வேண்டுமே என்று யோசித்தபோதுதான் அவரது மகன் லுப்துபுதீனை சந்தித்தேன். அவனையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆனால் நாசரும், கமீலா நாசரும் அவன் இன்னும் படிக்க வேண்டும் என்று நடிக்க வைக்க மறுத்தனர். அவர்களை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கிறேன். தந்தையை போலவே திறமையாக நடிக்கிறான். நிச்சயம் அவனும் பெரிய நடிகனாக வரும் எல்லா அறிகுறிகளும் தெரிகிறது. என்கிறார் விஜய்.
தனுஷுக்கு வில்லனாகிறார் கார்த்திக்!
2012-ஆம் ஆண்டு வெளியானமாற்றான்படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம்அனேகன்’. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார்.
அனேகன்என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலவானவன் என்று பொருளாம். அதற்கேற்றார்போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஷ் தோற்றத்துடனும் வருகிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். இவருக்குமங்காத்தாபடத்தில் அஜீத் நடித்திருந்தது போன்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரமாம்.
இப்படத்தை .ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ‘மாற்றான் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளது இந்நிறுவனம்
யூனிட்டை ஆச்சர்யப்பட வைக்கும் கோவை சரளா!
உதயகீதம் படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. கோயமுத்தூரைச் சேர்ந்தவரான இவர், கோவை தமிழிலேயே பேசி நடிப்பதால் அதுவே அவரை பிரபலப்படுத்தியதோடு அவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
ஒரு கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணியுடன் இணைந்து பல படங்களில் நடித்ததால் காமெடி நடிகையாக தன்னை நிறுத்திக்கொண்ட கோவை சரளா, தமிழ் சினிமாவின் பெண் காமெடி நடிகை என்ற பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார்.
குறிப்பாக, சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அவருடன் டூயட் பாடிய தனது தரத்தை உயர்த்திக்கொண்ட கோவை சரளாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேக்க நிலை ஏற்பட்டது.
ஆனால் லாரன்ஸ் இயக்கி நடித்த முனி, காஞ்சனா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்தது. அப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்தபோதும் கோவை சரளாவின் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது.
அதையடுத்து, பாகன், தில்லுமுல்லு, மாலினி 22 பாளையங்கோட்டை என பல படங்களில் நடித்தவர், கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.
இந்த படங்களில் தனது நடிப்பு ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த்தமாக நடித்துக்கொண்டிருக்கும் கோவை சரளா, சின்னச்சின்ன ரியாக்ஷனைகூட அற்புதமாக கொடுத்து நடித்து வருகிறாராம். சில காட்சிகளில் தனக்கு போதுமான திருப்தி இல்லையென்றால், அதில் இன்னொரு முறை நடிக்கிறேன் என்று டைரக்டர்களிடம் கேட்டு வாங்கி மீண்டும் நடித்துக்கொடுக்கிறாராம்.

சினிமாவில் நடிக்க வந்து 28 ஆண்டுகளுக்குப்பிறகும் கோவை சரளாவுக்கு நடிப்பில் இருக்கும் ஆர்வத்தைப்பார்த்து உடன் நடிக்கும் சக கலைஞர்கள் அசந்து போய் நிற்கிறார்கள்.

0 comments:

Post a Comment