நீ எங்கே அன்பே.....! [ஆக்கம்:அகிலன்,தமிழன்]

என் இதய துடிப்பை
உனக்காக துடிக்க வைத்து
சுகமான ஏக்கங்களை  தந்தாய்
என் நிலை மாறி
நானும்
காதல் கடலில் முழ்கி
உன் மீது
என் உறவை வளர்த்தேன்


என் இதயமும்
உன் காதலை சுமந்து
வாழ்வின் சுகம்  எல்லாம்
என் மனதில்  குவிய வைத்து
சந்தோஷ வானில்
அலை பாய்ந்தேன்

நீயோ
எவ்வித நினைப்பும் இல்லாமால்
கனவு போல
கலைந்து போனதால்
உன்  நினைவை சுமந்து
என்  மனம்
அமைதி இழந்து போனதடி

0 comments:

Post a Comment