காதல் வலிக்குதடி....

பெண் இன்றி 
காதலும் இல்லை 
காதல் இன்றி 
கண்ணீரும் 
இல்லைத்தான்-பெண்ணே

எனினும்
உன்னில்  
உறைந்து  போன 
என்  காதலை 
 தினமும் தினமும் 
தேடி பார்கிறேன்  பெண்ணே

உன்னிடத்தில் 
ஈரம் இன்றி
 வறண்டு போனதை 
எண்ணி என் விழிகளும்
 கண்ணீர் சிந்துகின்றன 

நானும்  
காதல் வறுமை உள்ள
 ஏழை தான் பெண்ணே
  உன்னை பார்த்தவுடன் 
ஏனோ உன்னிடத்தில்
 என் காதல் சிக்கி போனது
 நீயும்    வலியவே 
என் காதலை 
பறித்து சென்றதால்
நெஞ்சம் வலிக்குதடி 
................................................ஆக்கம்:அகிலன் தமிழன்.

0 comments:

Post a Comment