லாரன்ஸ்-வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி-2

ரஜினியின்சந்திரமுகி’ 2005–ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, மாளவிகா உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் வடிவேல் காமெடி மிகவும் பேசப்பட்டது.
பி.வாசு சமீபத்தில் கன்னடத்தில்சிவலிங்காஎன்ற படத்தை இயக்கினார். சிவராஜ்குமார், வேதிகா நடித்த இந்த படம் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் பி.வாசுவின் மகன் சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். திரில் கலந்த கிரைம் கதையான இது தமிழில்சந்திரமுகி–2’ என்ற பெயரில் தயாராகிறது.
சமீபத்தில் இந்த படத்தை ரஜினி பார்த்தார். எனவே தமிழில் தயாராகும் படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போதுசந்திரமுகி–2’ல் ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
லாரன்சுடன் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் பி.வாசு இயக்குகிறார். லாரன்ஸ் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி முடிவாகவில்லை.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. லாரன்சுடன் வடிவேலுவும் நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

0 comments:

Post a Comment