முள்ளி வாய்க்கால் நினவு தினம்............[கவி நிலவன்]


 நிறமும் நாளை மாறும்
காலம் நாளை மாறும்
எம் இனம் சிந்திய 
இரத்த வடு   மாறுமா ?

 பிறந்த சிசு தொடக்கம் 
முதியவன் வரை 
பசியால் 
பட்டினியால் 
மனம்  வெம்பி  
துடித்து நிக்க 
என் இனம் 
அடைந்த ரணம் 
இன்னும் 
ஆற  வில்லையே
தினமும் தீயாக 
எங்களை கொல்லுதே! 

உறவுகளும் 
ஒருவருக்கொருவர்  
ஆறுதல் கூற
நேரம் இன்றி 
இடம் பெயர்ந்து கொள்ள  
 ஏன் கொல்லப்படுகுறோம் 
என்று தெரியாமலே  
குண்டு தாக்குதலினால்
 தினம் தினம் 
இரத்தம் சிந்தி மடிய,  

 எம்  இனம் அழிந்ததை 
பொறுக்கமுடியமால்
 தமிழ் உறவுகள் 
இதயம் கனத்து
புல தேசம் எங்கும்
 புலம்பிய போதும் 
யாரும் 
கண் விழித்து பார்க்க
 மனமில்லாதிருக்க
இனவாதம் 
எங்கள் கண் முன்னே
 எங்களை 
அநாதை ஆக்கி
உறவுகளை
 கொன்று குவித்தனவே!

அழித்தவனும் 
நிம்மதியாக தூங்கிறான்
இனத்தை 
கூறு போட்டவனும் 
சொகுசாக 
வீதி வலம் வருகின்றான் 
உறவுகளை 
பறி கொடுத்தவன் மட்டும் 
தினமும்
 நரக வேதனை 
மே 18 
 வார்த்தைகாளால்
 வடிக்க முடியாத 
 வேதனை நிரம்பிய 
துன்பவியல் நாள் ஆனது 
                                                           

0 comments:

Post a Comment