அஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், முதன் முதலில் சிம்புவின்மன்மதன்படத்தில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார்.
சிவா மனசுல சக்திபடத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதன் பிறகு தமிழ் படங்களில் சந்தானத்துக்கு முக்கிய இடம் கிடைத்தது.  வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கிய  நிலையில்  சந்தானத்தின் மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியது. இவர் இல்லாத படம் இல்லை என்ற நிலை உருவானது. மற்ற நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்த சந்தானம்கண்ணா லட்டு தின்ன ஆசையாபடத்தில் இரண்டு காமெடி ஹீரோக்களில் ஒருவர் ஆனார். அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இப்போதுதில்லுக்கு துட்டுஎன்ற படத்தில் சந்தானம் நடித்து இருக்கிறார். இது விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே, அஜித்தின் வீரம் படத்தில் நடித்த சந்தானத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் அவரது 57வது படத்தில் நடிக்க அணுகி உள்ளனர்.ஆனால் அதில் காமெடியனாக நடிக்க விரும்ப வில்லை. இதுபற்றி கூறிய சந்தானம்.. “எல்லோருக்கும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போகவே விரும்புகிறார்கள். காமெடி படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் இதிலேயே நீண்ட காலம் நிலைத்திருக்க விரும்பவில்லைஎன்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தெறி படத்திலும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க சம்மதிக்கவில்லை.
கதாநாயனாக நடிக்கும் படங்களின் கால்ஷீட் பாதித்து விடக் கூடாது என் பதற்காகவே அஜித் படத்தையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
என்னவாக இருந்தாலும் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிடக் கூடாது.பேராசை யாரைத்தான் துரத்தலை!

0 comments:

Post a Comment