காது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெரிய தவறுகள்!

காது குடைவதில் என்ன பெரிதாக தவறு செய்துவிட போகிறோம். எப்படியும் தினமும் காது குடைந்து அழுக்கை எடுத்துவிடுகிறோமே என்று கூறும் நபரா நீங்கள்? இதுவே பெரிய தவறு தான். நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போல தவறு என்று தெரியாமலேயே நீங்கள் காதுகளை சுத்தம் செய்கிறேன் என ஐந்து தவறுகளை செய்து வருகிறீர்கள். அவை என்னென்ன என்று இனிக் காண்போம்
தினமும் சுத்தம் செய்வது நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் (lysozyme) எனப்படும் ஆண்டி-பாக்டீரியல் என்சைம் ஆகும்.
தினமும் சுத்தம் செய்வது
உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது
செவிப்பறையினை கிழித்த குச்சி 
காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காதுகளில் பஞ்சு வைப்பது
சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள் சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்
காதுகளில் பஞ்சு வைப்பது
மேலும், காதுக்குரும்பி (Ear wax) எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குச்சி போன்ற பொருட்களை பயன்படுத்துவது
சிலர் காது குடைவதை சுகமான வேலையாக செய்து வருவார்கள். பேனா, கறிவேப்பிலை குச்சி, விரல் நகம், போன்றவற்றை பயன்படுத்தி காது குடைவார்கள். உண்மையில் இது சுகமாக இருப்பினும், காதின் உள்ளே இருக்கும் சருமத்தை அதிகமாக எளிதாக பாதிக்கின்றனர் என்பது தான் உண்மை.
நீரை உள்ளே ஊற்றுவது
சிலர் காதை நன்கு கழுவுகிறேன் என்ற பெயரில் காதினுள்ளே தண்ணீரை நேராக ஊற்றிக் கொள்வார்கள். இப்படி செய்வதில் எந்த தவறும். ஆனால், அதே சமயம் உள்ளே ஊற்றிய தண்ணீர் முழுதுமாக காய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படி நீரை நீராக காதினுள் ஊற்றி கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லவே இல்லை.
பின்னூசி

காது குடைய பின்னூசி, பெண்கள் பயன்படுத்தும் ஹேர் பின் போன்றவற்றை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். இது செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதியில் இருக்கும் மிர்துவான சருமத்தில் எளிதாக கிழிசல் உண்டாக்கிவிடும்.
                                                                                                

0 comments:

Post a Comment