பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"[06OF06]

[Science in the Ancient Tamil Poetries  ]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பகுதி:06  "அண்டம்"
சூரியனை சுற்றி கிரகங்கள்:
 சிறுபாணாற்றுப்படை 242 – 245

"வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளூம் தேற்றத்து
விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி " [242-245]
 [இது கூறப்பட்ட காலம் கி பி 200 என்பது குறிப்பிடத்தக்கது !]


இதன் கருத்து என்வென்றால்:   ஒளி பொருந்திய வானத்தில், கோள்கள் சூழ இளங்கதிர் வீசும் சூரியனைப் பழித்துக் கூறும் வகையில்  ஒளி வீசுகின்ற பொன்னால் செய்த கலத்தில் நீவிர் விரும்புகின்ற உணவினை இட்டு, குறைவிலாத விருப்பத்துடன் தானேமுன் நின்று உணவினைப் பரிமாறி உண்ணச் செய்வான் .
இனி ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர்  பாடிய திருவாசகத்தில் கூறிய ஒரு கருத்தை பார்ப்போம்.

திருவாசகம்-திருவண்டப் பகுதி

பாடல் எண் : 1

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்"

இதன் விளக்கம்:
பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார்?. ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது?. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது?. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

14 ஆம்  நுற்றாண்டில் உலகம் உருண்டை என   கலிலியோ  கூறியதால் அவர் உயிர் பலி எடுக்கப்பட்டது.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்"

ஆனால் மாணிக்கவாசகர் 9  ஆம்  நுற்றாண்டிலேயே இதை கூறிவிட்டார் அண்டம் என்றால் கோழி முட்டை என பொருள் படும் .அது மட்டும் அல்ல ,இவை தொகுதி தொகுதியாக வானில் உள்ளன என்றும் கூறினார்.பிறக்கம் என்றால் தொகுதி ,குவியல் என்று பொருள் .

இது போன்று எத்தனை அண்டங்கள் உள்ளன?

"நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன"

மேலும் ஒரு கோள் இன்னொரு கோளை,ஒரு அண்டம்  இன்னொரு அண்டத்தை இழுத்துக்கொண்டு நின்றன என்றார். 

"ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்"  

இதன் மூலம் ஈர்ப்புச்சக்தி என்ற ஒன்றினை அவர் கூறுகிறார் . 14 ஆம்  நுற்றாண்டின் பின் வந்த நியூட்டன் புவி ஈர்ப்புச்சக்தியை கண்டுபிடித்தான்.ஆனால் மாணிக்கவாசகரோ  9  ஆம்  நுற்றாண்டிலேயே இதை கூறிவிட்டார் 

இவ்வாறாகப் பரந்து பட்ட விஞ்ஞான அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை!அதுதான் எனக்கும் எல்லோருக்கும் ஒரு வருத்தம்.
(முற்றும்) 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉
Theebam.com: பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம் [01/06]:

3 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, June 22, 2013

  "உல்கம்" என்பதை "உலகம்" என வாசிக்கவும் .மேலும் இத் "தொடர்" தற்காலிகமாக இப்போதைக்கு முற்று பெற்றுள்ளது.

  கம்பனின் அறிவியல் ஆழம்: என்ற மாசித் திங்கள் -2013 "Theebam/தீபம்" கட்டுரையில் "மேற்கே உதித்த சூரியன்!"என்ற தலைப்பின் கீழ் எனது நண்பர் "செல்வதுரை சந்திரகாசன்"கம்பனின் 8891 பாடல் மூலம்-நமது பூமி உருண்டை வடிவானது என்று நமக்குத் தெரியும்.-ஆனால், கம்பனுக்குமா? -என்று ஒரு கேள்வி கேட்டு தெளிவு படுத்தியுள்ளார் .அதாவது கம்பர் அப்போதே பூமி உருண்டை என கூறிவிட்டார் என்கிறார்.

  அது போலவே உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை பற்றி உயிர்களை ஆறு பிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே.

  "ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
  இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
  மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
  நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
  ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
  ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
  நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே". 27

  இருப்பினும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய டார்வினின் கருத்துக்களும் தொல்காப்பியரின் கருத்துக்களும் ஒன்றுபட்டும் வேறுபட்டும் காணப்படுகின்றன.இவை பற்றி நாம் அலசலாம்.இப்படி இன்னும் பல பல தேடி ஆராயலாம்.

  ஆகவே இத் "தொடர்" பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் தொடரலாம்?

  ReplyDelete
 2. காலம்,காலமாக நாம் ஒற்றுமையற்ற இனமாகவே வாழ்ந்த வர்கள்.தன இனத்தவனின் பெருமைகளை இருக்கும்போதும் பேசியதில்லை.உதாரணமாக அரிய பெரும் நூல்களை தந்த அவ்வை பற்றியோ வள்ளுவர் பற்றியோ எப்புலவரோ அன்று பாடியிருந்தால் அவர்களைப்பற்றி நாம் தெளிவாக அறிந்திருக்கலாம்.ஏன்,திருக்குறள் கூட பெரும் சிரமப்பட்டே வெளியிடப்பட்டது.இந்த நிலையினை இன்றும் காணலாம்.
  உங்கள் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவராத பல உண்மைகளை தெளிவு படுத்துவன.தொடரட்டும்.நன்றி.

  ReplyDelete
 3. டார்வினின் உயிரின பரிணாமய வளர்ச்சி பற்றிய சிறு கட்டுரை ஒன்று, கடைசி இதழில் குறிப்பிட்டபடி அடுத்து எழுதுகின்றேன். இதை வாசிப்பவர்கள், இங்கு ஒன்றும் உயரினம் இப்போது இருக்கும் வடிவத்தில் அப்போதே ஜோடி, ஜோடியாகப் படைக்கப்படவில்லை என்பது தெரிய வரும். அதிலிருந்து தில்லையின் தொல்காப்பிய அலசல் தொடரட்டும்.

  ReplyDelete