காற்றினில் வரும் கீதமே!


காற்றினில்வரும் கீதமே!
கரும்பென இனித்திடும்
உன் இனிமையை
எண்ணியே கனத்தது நெஞ்சம்!

மனதை அள்ள வந்த கீதமே
உன்னை    கேட்பதினால்
பித்தாய்  மனமே  அலையுதடி.
மெட்டெடுத்துப் பாடி வந்தே
என்னை சிறை பிடித்தவளே!

மெய்சிலிர்க்க வைக்கும்
எண்ணங்களால்
துன்பமும் தொலைவாய்
 போனதடி!

என்னில் வார்த்தைகள்
 வசப்படவில்லை
என்னை நீ
 என்ன வசியம் செய்தாய்  என்று
உன்னோடு கழியும் பொழுதுகள்
அழகான இன்பம் காணுதே!

நீ   தென்றலில்  ஓடி வருகையிலே
மயங்கி நின்று
அள்ளி அணைத்து கொள்வேனே!
-காலையடி,அகிலன்.

0 comments:

Post a Comment