விக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்


ராஜேஷ் எம்.செல்வா தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்- அக்‌ஷ்ரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் கம்ல்ஹாசனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸுக்கு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் மற்றும் அக்‌ஷ்ரா ஹாசன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் படம் குறித்த முக்கிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்திற்காக இசையமைப்பு பணி தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கோயர் படத்திலும், கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment