விடியலை நோக்கி...



இதயங்களில் ஏக்கங்களை
இருத்தி போனாலே
இனியேனும் விடியுமா!
இல்லறங்கள் சிறக்குமா!
இதுவும் கடந்துபோகும்
இன்னும் தள்ளிப்போ!
இசைக்க மறந்துவிடும்
இரக்கமில்லா நினைவுகள்
இனிக்க வில்லையே!
இன்றைய  பொழுதிலே
இமையினுள் உருளும்
இன்னல்களை உதறிப்போ!
இடமெங்கும்  வெல்வாய்
இக்காலம் புரிவாய்!
இயல்பே  வாழ்வென்று
இவற்றை கொள்வாய்!
இருளான மனமும்
இருளை பிரித்துவிடுமே!
இலக்கின்றிப் அலங்கரிக்கும்
இரவுகளையும் வீசியெறி!
இறந்து கிடைக்கும் 
இல்லாதவை  விளக்குகளாய்
இனிதே  வளர்ந்தே
இயற்கையது சொல்லுமே!
இருள் மறையவே
இன்பம் நிகழும்
இருளில்லா சிந்தனையே
இன்பத்தின் இதிகாசம்
இவ்வளவு ஆனந்தத்தின்
இலட்சியத்தின் வெற்றி!
இதையே உலகம்
இயம்பும் விரும்பும்
இருளை திறந்தே !
இன்னும் பயணித்து
இயங்கவே வாழ்வின்
இசையும் விளங்கும்!
இரகசிய பெட்டகமாய்
இவ்வுலகில் பயணிக்கிறதே !
இருளில் இருந்தே
நீந்தி வந்துவிடு!
காலியான வாழ்வும்
கரையை காணுமே!
கலக்கம் இன்றியே
கரையை கடக்கவே
இருட்டினில் கொள்ளாது!
இடியென பாய்ந்தே
இரவை கடந்துவிடு!
சிறகு முளைத்துவிடும்!

✍✍✍✍✍✍✍✍✍✍காலையடி அகிலன் ராஜா



There are 

0 comments:

Post a Comment