நோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிடம்

                               
                   ↞↞↞↞↞↞↞↞↞↞01↠↠↠↠↠↠↠↠↠
திருடன்: என் வழியில் குறுக்கிட்டதாலதான் போலீசை அடித்தேனுங்க.
 நீதிபதி: எப்படி?
திருடன்: ஜெயிலில் இருந்து நான்  தப்பி ஓடுறபோது  தடுத்தார்கள்.
 ↞↞↞↞↞↞↞↞↞↞02↠↠↠↠↠↠↠↠↠
நீதிபதி : பார்த்தால் அப்பாவியாக தெரியுறாய். நீயா  பிக்பாக்கெட் .நம்பவே முடியவில்லை.
குற்றவாளி: உங்களை மாதிரி தானுங்க எல்லோரும் ஏமாந்துவிடுவான்கள்.
 ↞↞↞↞↞↞↞↞↞↞03↠↠↠↠↠↠↠↠↠
வேலு: வீசிடி கடையெல்லாம் மூடினதாலை நம்ம டைரக்டர் கையுடைஞ்ச   மாதிரி ஆயிட்டார்.
பாலு: என் இவங்கள்தானே திருட்டு விசிடியை ஒழிக்க வேணும் எண்டு குதிச்சவங்கள்.
வேலு: தமிழ் விசிடி மட்டுமா ஒழிச்சாங்கள், இங்கிலீசையும் ஒழிச்சா இவர் எதைப்பார்த்துப் படம் எடுக்கமுடியும்.
 ↞↞↞↞↞↞↞↞↞↞04↠↠↠↠↠↠↠↠↠
மனைவி: தரையெல்லாம் தண்ணியாயிருக்கு , ஒருக்கால் வழுக்கினானும் பார்த்து நடவுங்கோ!
கணவன்: ஒருகால் தான் வழுக்குமா? இரண்டு காலும் வழுக்காதா?
 ↞↞↞↞↞↞↞↞↞↞05↠↠↠↠↠↠↠↠↠
மருந்துக் கடைக்காரர்: நீங்க தந்த டொக்டர் துண்டில ஒரு மருந்து தான் எங்ககிட்ட இருக்கு. முதல்ல எழுதியிருக்கிற மருந்து எங்ககிட்ட இல்லை.
நோயாளி:  மேல உள்ளது மருந்தின்ர பெயரில்லை. அது என்னுடைய பெயர்.
 ↞↞↞↞↞↞↞↞↞↞06↠↠↠↠↠↠↠↠↠
கோபு  : இருபது வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையை படித்ததும் நீங்களா இப்படி எழுதி யது  என்று ஆச்சரியமாக இருந்தது
 பாபு: உங்களுக்காவது ஆச்சரியம், எனக்கு சந்தேக   மாகவே இருக்கிறது.
↞↞↞↞↞↞↞↞↞↞07↠↠↠↠↠↠↠↠↠  
நண்பர் 1 : சீக்கிரமே பணத்தைப் பெருக்க என்ன வழி கூறுங்கள் பார்க்கலாம்.
நண்பர்2 :   பணத்தை கீழே போட்டுவிட்டு  விளக்குமாறினால் விரைவாக ப் பெருக்குங்கள்.
↞↞↞↞↞↞↞↞↞↞08↠↠↠↠↠↠↠↠↠ 
 வாத்தியார்: பரவாயில்லையே! நான்  எவ்வளவு அடிக்கும் உங்க மகனுக்கு வராத '' '' இப்ப மட்டும் வருகுதே,என்ன செஞ்சிங்க?
நண்பர் :  நீங்க அடிச்சும் வராத '''' அவன் தண்ணி அடிச்சபோது வந்திரிச்சு!
  ↞↞↞↞↞↞↞↞↞↞09↠↠↠↠↠↠↠↠↠
மகன்:அப்பா பயித்தியம் என்றா என்னப்பா?
தந்தை : சம்பத்தம் ,சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிக்கொண்டு இருப்பாங்க, பேசுற ஒண்ணுமே புரியாது. என்ன புரிஞ்சுதா?
மகன்: சுத்தமா புரியலைப்பா!
தந்தை:!!!!! 
 ↞↞↞↞↞↞↞↞↞↞10↠↠↠↠↠↠↠↠↠
நோயாளி :டொக்ரர் ,மயக்க ஊசி போடாம ஆப்பரேசன் பண்ணிறீங்களே , ரொம்ப வலிக்குது டொக்ரர்!
 டொக்ரர்: கொஞ்சம் பொறுத்துக்கிங்க! கொஞ்சநேரத்தில் தான்    '' எல்லாமே'' முடிஞ்சிடுமே!

⇚⇚⇚⇚⇚⇚⇚⇚⇚தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன் ⇛⇛⇛⇛⇛⇛⇛⇛⇛

0 comments:

Post a Comment