புலம் பெயர் நாட்டிலிருந்து புத்திரனின் புலம்பல்


(செய்யுள் ✎:செல்லத்துரை,மனுவேந்தன்)[செய்யுள் வகை:ஆசிரியத்துறை]
 📧
அன்புள்ள அம்மாவுக்கு
                  ஆசையுடன் ஒரு கடிதம்
உன்புள்ளை எழுதுகிறேன்
                 உரிமையுடன் மனமுருகியே
பெண்பிள்ளை என்றெனக்குப்🚺
                பேசி முடித்தவளை
கண்முன்னே கொண்டுவரக்
                 கைபேசியில்  வாராயோ!

  📧
அன்னநடையென்றால்
                 இவ்வவசர வுலகிற்காகாதே
சின்னஇடையென்றால்
               சித்திரம்வரையவாஅவளெனக்கு
உன்போல் அமைந்தாலென்🌏
               உலகமே அவளெனக்கு
கண்முன்னே கொண்டுவரக்
                  📱கைபேசியில் வாராயோ!

  📧
வெண்ணிறத் தாளிலும் வெண்மனமே
                                வாழ்வுக்குகந்த தையா
என்றும் எடுத்துரைத்து எடுப்பாய்
                           என்வாழ்வுக்கு ஒளிதேடியிம்
மண்ணில் லென் வாழ்வில்🌟
                       பங்கெடுக்கும் மங்கை யவளை 
கண்முன்னே கொண்டுவரக்
                          📱கைபேசியில் வாராயோ!

  📧
மண் மணமுள்ள மங்கை
              யிவள் மாலையிட்டா  ளெனில்
கண்ணிமை போல் காப்பா 🧖
              ளென் வாழ்வினையேயென்ற
உன்மொழி போற்றும் உத்தமளை
                   ஒருமுறையாயினும்
கண்முன்னே கொண்டுவரக்
                      📱கைபேசியில் வாராயோ!

[செய்யுள் வகை:கலித்துறை]
  📧
சின்னத்தனமான மனிதர்களே
               சீதனம் பேசுவார்க ளென்ற
எண்ணத்தினாலு மம்மாநீ
              எங்கோ யுயர்ந்து விட்டாயிம்
மன்னனின் மாளிகையி லவள்
              மகாராணியாய் மலர்ந்திடவே 
கண்முன்னே கொண்டுவரக்

              📱 கைபேசியில் வாராயோ!

📭📭📭📭📭📭📭📭📭📭📭📭📭📭📭📭📭
0 comments:

Post a Comment