நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
நோயாளி: டாக்டர், நான் செத்துப்போன மாதிரி கனவு காண்கிறேன்!
டாக்டர்: பயப்படாதீங்க, நானும் உங்களுக்கு ஆப்பரேஷன் செய்ததாக கனவுகண்டேன்!
-02-
நோயாளி: டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர்: 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு
சொல்லுங்க... என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்!
-03-
நோயாளி: டாக்டர், நான் எப்போ குணமாகி வீட்டுக்கு போவேன்?
டாக்டர்: நீங்க வந்து 20 நாள் தானே ஆச்சு, ஆனா என் மனைவி கேட்ட 50,000 ரூபா நான் உங்ககிட்ட வாங்குனதுக்கப்புறம் தான் நீங்க குணமாகி வீட்டுக்கு போவீங்க!
-04-
நோயாளி: டாக்டர், இந்த மருந்தைச் சாப்பிட்டா எனக்கு என்ன ஆகும்?
டாக்டர்: மருந்து உங்களுக்கு வேலை செஞ்சா நீங்க நல்லா ஆகிடுவீங்க, இல்லனா நீங்க திரும்பவும் வருவீங்க! நாங்க நல்லா ஆகிடுவோம்!
-05-
நோயாளி: டாக்டர், எனக்கு உடம்பு முழுக்க வலிக்குது.
டாக்டர்: சரி, எங்கேயெல்லாம் வலிக்கலனு சொல்லுங்க!
-06-
காதலன்: உன்னைப் பார்க்கலனா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.
காதலி: பார்த்தா மட்டும் என்னவாம்? அப்பவும் பைத்தியம் மாதிரி தான் அலையுறீங்க!
-07-
காதலி: நான் பாடுறது உனக்கு பிடிக்குமா?
காதலன்: ரொம்ப பிடிக்கும்! நீ பாடும்போது தான் பக்கத்து வீட்டு நாய் சத்தமே கேட்க மாட்டேங்குது!
-08-
காதலி: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?
காதலன்: எங்க வீட்ல அம்மா என்னை ரொம்பத் திட்டுறாங்க.
காதலி: ஏன்?
காதலன்: 'உன்னைக் காதலிச்சாலும் பரவாயில்லை, லவ் பண்ணி தொலைச்சிட்டேன்' என்று!
-09-
காதலி: நாம ஏன் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக்கிறோம்?
காதலன்: ஏன்னா, மத்தவங்க கூட சண்டை போட்டா அடிப்பாங்க, ஆனா உன்கூட போட்டா 'சாரி' சொன்னா போதும்!
-10-
கணவன்: இன்னைக்கு சமையல் சாப்பாட்டில ஏன் உப்பு கசக்குது?
மனைவி: சீரியல்ல இன்னைக்கு ஒரே அழுகை காட்சி, கண்ணீர் உப்பு கறியில சேர்ந்திருச்சு!
-11-
மனைவி: ஏங்க, நீங்க ஏன் தூக்கத்துல என் பேரைச் சொல்லிட்டே இருக்கீங்க?
கணவன்: முழிச்சிருக்கும்போது உன் பேரைச் சொல்லவே பயமா இருக்கு, அதான்!
-12-
கணவன்: டாக்டர்கிட்ட போனேன், எனக்கு ஒரு மாசம் ஓய்வு வேணும்னு சொன்னாரு.
மனைவி: அப்படின்னா நாம ஊருக்குப் போலாமா?
கணவன்: இல்ல, உன்னைத்தான் உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பச் சொன்னாரு!
-13-
மனைவி: நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.
கணவன்: என்னது?
மனைவி: நாம இனி
மூன்று பேர் பேர் ஆகப்போறோம்!
கணவன்: என்னது, குழந்தையா?
மனைவி: இல்ல, எங்க அம்மாவும் நம்ம கூட வந்து தங்கப்போறாங்க!
-14-
மனைவி: ஏங்க, எத்தனை நாளைக்குத்தான் பழைய புடவைகளை திரும்பத் திரும்ப பாவிக்கிறது.எனக்கு ஒரு அழகான புடவை எடுத்து கொடுங்க.
கணவன்: அப்படியா? நானும் எத்தனை நாளைக்குத்தான் பழைய மனுசியோட வாழுறது! எனக்கும் ஒரு அழகான மனுசியாய் எடுத்துக் கொடுப்பியா?
மனைவி: !!!!!
-15-
கணவன்: சாப்பாட்டுல ஏன் கல் இருக்கு?
மனைவி: நீங்கதானே சொன்னீங்க, சாப்பாடு 'ஸ்ட்ராங்'கா இருக்கணும்னு!
-16-
கணவன்: டீயில ஏன் சர்க்கரை இல்ல?
மனைவி: யாரவது பொண்ணுங்களை கண்டால் இனிக்க இனிக்க பேசுறிங்களே! அதையே கலந்து குடிச்சுக்கோங்க!
-17-
மனைவி: ஏங்க, நம்ம குழந்தை ஒரு ரூபா நாணயத்தை முழுங்கிடுச்சு! சீக்கிரம் டாக்டரை கூப்பிடுங்க.
கஞ்சன்: எதுக்கு? டாக்டர் வந்தா 500 ரூபா பீஸ் கேட்பாரு. அவன் ஒரு ரூபாயை முழுங்குனா என்ன, 500 ரூபா மிச்சம் தானே!
-18-
கஞ்சன்: டாக்டர், பல்லை பிடுங்க எவ்வளவு ஆகும்?
டாக்டர்: 200 ரூபாய்.
கஞ்சன்: 20 ரூபாய்க்கு சும்மா லைட்டா மட்டும் ஆட்டி விட முடியுமா?
-19-
கஞ்சன் மரணப்படுக்கையில்: "மனைவி எங்கே?"
மனைவி: "இங்க தான் இருக்கேன்.
"கஞ்சன்: "பிள்ளைங்க எங்கே?"
பிள்ளைங்க: "நாங்களும் இங்க தான் இருக்கோம்."
கஞ்சன்: "அப்போ அந்த ஹால்ல ஏன் தேவையில்லாம லைட் எரியுது? போய் அணைங்கடா!
-20-😁
கஞ்சன்: டாக்டர், எனக்கு உடம்பு சரியில்லை.
டாக்டர்: மருந்து சீட்டு எழுதியிருக்கேன், மருந்து வாங்கிக்கோங்க.
கஞ்சன்: மருந்து எதுக்கு டாக்டர்? அந்த சீட்டையே கஷாயம் போட்டு குடிச்சா குணமாகாதா?
தொகுப்பு : செ .மனுவேந்தன்/
theebam.com / ttamil.com / dheebam / theebam web
0 comments:
Post a Comment