"இரட்டை முகங்கள்!!" &'நேரம் இல்லை'

 



"இரட்டை முகங்கள்!!"

 

 

"இரட்டை முகங்கள் கொண்டு வாழும்

இங்கிதம் தெரியா வம்பு மக்களை

இடித்து உரைத்து ஒதுக்கி வைத்தால்

இன்பம் மலரும் ஒற்றுமை பெருகும்!"

 

 

"முன்னுக்கு ஒன்று மகிழ்வாகக் சொல்லி

பின்னுக்கு வேறு இழிவாகக் கூறி

பொன்னான நேரத்தை விரயம் செய்யும்

அன்பு அற்ற அரக்கர்கள் இவர்களோ?"

 

👹 

 

'நேரம் இல்லை'

 

"'நேரம் இல்லை' இலகுவாக சொல்லுகிறாள்

ஓரத்தில் நின்று வானத்தை பார்க்கிறேன்

அரசமர நிழலில் புத்தன் சிரிக்கிறான்

வீரம் எல்லாம் கண்ணீரில் கரையுது!"

 

"ஈர நெஞ்ம் கல்லாய் இருக்குது

இரகசியமாய் விலகி எங்கோ போகுது

அரவணைக்க துடித்த கைகள் இரண்டும்

மரத்து போய் சோர்ந்து விழுகுது!"

 

"'நேரம் இல்லை' தட்டி கழிக்குது

காரணம் எதோ அடுக்கி வைக்குது

பேரம் பேச அன்பு சரக்கல்ல

மரணம் வரை ஒட்டி இருப்பதே!"

 

"தூர போக துள்ளி குதிக்குது

நரக வேதனை அள்ளி கொட்டுது

கரணம் அடித்து ஒதுக்கி தள்ளுது

'நேரம் இல்லை' நானும் சாகிறேன்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி/யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment