"பொன் மகள் கையிலே பொற்குடமோ..?"-&-‘’ஓடக்கரை ஓரத்திலே’’

 


👩"பொன் மகள் கையிலே பொற்குடமோ..?"

 

"பொன்மகள் கையிலே பொற்குடமோ

பொறுமையில் இவள் பெரும் கடலோ

பொங்கி எழும் அழகு தெய்வீகமோ

பொய்கையில் பூத்த தாமரை மலரோ

பொல்லாங்கு அற்ற என்  கண்ணாட்டியோ!"

 

"பொன்னில் வானம் போட்ட கோலமோ

என்றும் மிளிரும் அழகு தேவதையோ

அன்னம் தோற்கும் சிறு நடையோ

என்னில் பாசம் கொண்ட மானோ 

அன்பில் இணைய என்று வருவாயோ?"

 ↭↭↭↭↭↭

💆‘’ஓடக்கரை ஓரத்திலே’’

 

ஓடக்கரை ஓரத்திலே ஓடோடி வந்தேனே

ஒய்யாரி உன்னைக் இனிதாக காணவே!

ஓரமாய் நிற்கையில் முறைச்சு பார்க்கிறேயே

நீலக் கருங்குயிலே வீறாப்பு பேசாதேடி!" 

 

"வேகாத வெயிலில் ஒதுங்கி நின்றேனே

கற்றாழை முள்ளு காலை குத்துதே!

செக்கச் சிவந்தவளே பரிகாசம் பண்ணாதேடி

சிவத்த பாவாடை  சித்தம் கலக்குதடி!"

 

"நெற்றியிலே பொட்டு கண்ணை குத்துது  

நெருங்கி பேச ஆசை இழுக்குதே!   

மருண்ட விழியோ காதல் வீசுது

மஞ்சம் காத்திருக்கு அருகில் வாராயோ!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்] 

0 comments:

Post a Comment