"தொடர்வோம்!" & "கசக்கும் உண்மைகள்" -கவிதைகள்"தொடர்வோம்!"

[அந்தாதிக் கவிதை]

"தொடர்வோம் இன்றே தாமதம் வேண்டாம்

வேண்டாத கொள்கைகளை தூக்கி அகற்றி

அகற்றிய இடத்துக்கு நல்லதை சேர்த்து

சேர்த்த திட்டத்துக்கு விளக்கம் கொடுத்து

கொடுத்த அறிவுரைகளை ஒழுங்கு செய்து

செய்த எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லி

சொல்லிய படியே மாறாமல் நின்று

நின்ற நடவடிக்கைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து

அளித்த உதவிகளை அன்றே மறந்து

மறந்து என்றாலும் வஞ்சகம் தீர்க்காமல்

தீர்க்க வேண்டியதை உடனடியாக எடுத்து

எடுத்த முடிவுகளை ஒவ்வொன்றாக தொடர்வோம்!"

 

 

"கசக்கும் உண்மைகள்" 

"பொய்களை பூசி பெருமை பேசுகிறான்

மற்றவனை தாழ்த்த புராணம் படைக்கிறான்

மகாவம்சம் ராமாயணம் இனிக்கும் பொய்கள்

உண்மையான வரலாறு கசக்கும் உண்மைகள்!"

 

"கல்வெட்டு தொல்பொருள் சான்றுகள் வர

கன்னத்தில் கைவைத்து தடைகள் செய்கிறான்

மாயைகள் உடைய திரைகள் கிழிய

அரச படையுடன் அட்டகாசம் புரிகிறான்!"

 

"தைரியம் கொண்டு கசப்பை ஒப்புக்கொள்

ஆழங்களில் உள்ள ஞானம் வெளிவரும்

வளர்ச்சிக்கான வாய்ப்பு, கட்டாயம் உயரும்

உண்மைகள் விழித்து விடுதலை ஓங்கும்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment