விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம் 
💠நேர்த்தியான புது இன்சுலின்!

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உள்ளவர்களின் உடலில் இன்சுலின் சுரக்காததால் தினமும் ஊசி வாயிலாக இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நோயின் தீவிரவாதத்தை பொறுத்து தினமும் எடுத்துக்கொள்ளும் யூனிட்டுக்களின் அளவு  கூடவோ குறையவோ செய்யும்.

 

 தற்போது சீனாவை சேர்ந்த ஜிஜியாங்  பல்கலை ஆய்வாளர்கள், ஸ்மார்ட் இன்சுலின் என்ற புதுவகை இன்சுலினை உருவாக்கி உள்ளனர். இதை சாதாரண இன்சுலின் போல அடிக்கடி இல்லாமல், வாரம் ஒரு முறை போட்டுக் கொண்டாலே போதும் ரத்த சர்க்கரை  அளவு கட்டுக்குள் வரும்.

 

 இந்த ஸ்மார்ட் இன்சுலினில், இன்சுலின் ஹார்மூன் க்ளூகானிக் ஆசிட் எனும் ரசாயனத்துடன் சேர்ந்திருக்கும் உடலுக்குள் ஊசி வாயிலாக அனுப்பினால், உடனே ரத்தத்தில் கலக்காது. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மட்டும் தான் இன்சுலின் ரத்தத்தில் கலந்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

 

 இது எவ்வாறு நடக்கிறது? இன்சுலினோடு இணைந்திருக்கும் வரை, க்ளூக்கானிக் அசிட் இன்சுலினை செயல்படவிடாது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உடலில் உள்ள குளுக்கோசுடன் சுலபமாக சேரும் இயல்புடைய க்ளூக்கானிக் அசிட்,  இன்சுலினுடன்  கொண்டிருக்கும் இணைப்பை இழக்கும். இதன் வாயிலாக இதுவரை செயல்படாத நிலையில் இருந்த இன்சுலின் செய்யப்பட தொடங்கும்.

 

 ஸ்மார்ட் இன்சுலின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் தேவையில்லாத நேரத்தில் இன்சுலினை  எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடிகிறது என்பதே. இதன் வாயிலாக அனாவசியமான இன்சுலின் நுகர்வு குறைகிறது.

 

 இது எலிகள் மீது சோதிக்கப்பட்டு  வெற்றி  அடைந்ததைத்  தொடர்ந்து மனிதர்கள் மீது சோதிக்கப்பட உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

 

 

🐸20 நிமிடங்களில் புற்றுநோய் சோதனை

புற்றுநோய் என்பது ஒரு கொடிய நோய்தான் அதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. நுரையீரலில் ஏற்படும் புற்று நோயை கண்டறிய தற்போது ஒரு இருக்கும் ஒரே வழி சிடி ஸ்கேன் தான்.இதன் வாயிலாக சில நேரம் புற்றுநோய் இருப்பதை தெளிவாக அறிய முடியாது.

 

 ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் இந்த வசதி கிடைப்பதில்லை. அதனால் நுரையீரலில் புற்றுநோயை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்றை அமெரிக்காவின் மாசஷூசெட்ஸ் தொழில்நுட்ப கழகம் கண்டறிந்துள்ளது.

 

  ஆஸ்துமாவுக்கான 'இன்ஹேலர்' போன்ற ஒரு கருவி வாயிலாக நோயாளிகளுக்கு சில நானோ  துகள்கள் கொடுக்கப்படும். நானோ  துகள்கள் புற்றுநோய் கட்டிகள் உள்ள 'ப்ரோடியேசஸ்' எனும் நொதியுடன் வினை புரியும்.

 

பின்  நோயாளிகளின் சிறுநீர் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் வாயிலாக நோய் இருப்பது கண்டறியப்படும்.

 

 மனிதர்களுக்கு ஏற்படுவது போன்ற நுரையீரலில் புற்று நோயை எலிகளில் செயற்கையாக விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். 7.5 வாரங்களுக்கு பின்னர் கட்டிகள் நன்கு வளர்ந்த நிலையில், புதிய முறையில் சோதனையை தொடங்கினர்.

 

 சோதனை முடிவு சரியாக இருந்தது. இந்த புதிய முறை விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட உள்ளது.

 

இதிலும் வெற்றி கிட்டினால் இந்த சோதனை முறை பயன்பாட்டுக்கு வந்து விடும். வெறும்  20 நிமிடங்களில் நுரையீரல் புற்று நோய் உள்ளதா இல்லையா என்ற முடிவு தெரிந்து விடும்.

 

🌇வெப்பம் மிகுந்த ஆண்டு 2023

பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் இவ்வாறு அதிகரிப்பதால் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். அமெரிக்காவின் நாசா உட்பட உலகம் முழுவதும் இருக்கும் ஐந்து அறிவியல் மையங்கள் 2023 தான் கடந்த 174 ஆண்டுகளிலேயே மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டு என்று அறிவித்துள்ளனர்.

 

 கடந்த ஆண்டின் சராசரி வெப்பநிலை என்று ஐந்து மையங்களுக்கு சற்றே மாறுபட்ட முடிவுகளை தந்திருந்தாலும் கூட 2023ஆம் ஆண்டு தான் வெப்பம் மிகுந்த ஆண்டு என்பதில், ஐந்து மையங்களும் ஒரே கருத்தை கொண்டுள்ளன. இதற்கு முன் வெப்பமான ஆண்டு என்ற புகழை 2016 பெற்றிருந்தது. கடந்த ஆண்டிலேயே மற்ற மாதங்களை விட ஜூலை மாதத்திற்கு தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள நாடுகளில் இந்த வெப்பம் பதிவு செய்யப்பட்டது.

 

 நிலப்பகுதிகளை மட்டுமின்றி கடலின் வெப்பமும் கடந்த ஆண்டு அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்த அதிகபட்ச வெப்பத்தால் அன்டார்டிகா பகுதிகளில் பனி  அதிகளவில் உருகியுள்ளது. இந்த வெப்பத்தால் நிறைய புயல்கள், சூறாவளிகள் ஆகியவை உருவாகி மக்களை கடுமையாக பாதித்துள்ளன. இந்த வெப்பத்தால் வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா  நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான முறை காட்டுத்தீ  ஏற்பட்டது. காட்டுத் தீயால்  மிக அதிகபட்சமான காட்டு பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளதும் இதே ஆண்டில் தான்.

 

 கடந்த ஆண்டு வெப்பநிலையிலே பரவாயில்லை என்ற அளவுக்கு இந்த ஆண்டு வெப்பநிலை இருக்கும் என்று அறிவியலாளர்கள் கணித்திருக்கின்றனர். குறிப்பாக ஏப்ரலுக்கு பிரதான மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

🪴நச்சு செடியிலிருந்து மருந்து.

நம் உடலில் 'லெப்டின்' எனும் ஒரு ஹார்மோன் இருக்கிறது. இது நம் உடலுக்கு உணவு தேவைப்படுகிறதா என்பது குறித்தும் உணவு உண்டபின் அது போதுமா என்பது பற்றியும் மூளைக்கு தகவலை அனுப்பும்.

 

 சிலர் உடலில் இந்த ஹார்மோன் சரியாக வேலை செய்யாததால், உடலுக்கு தேவையான அளவு உணவு சாப்பிட்ட பின்னரும் உணவு உண்ட திருப்தி ஏற்படாது. இதனால் அதிகமான உணவை உட்கொண்டு உடல் எடை அதிகரிக்க கூடும்.

 

 இந்த ஹார்மோனை தூண்டக்கூடிய ஆற்றல் 'செலஸ்ட்ரால்' என்ற வேதிப்பொருளுக்கு உண்டு. இதை எலிகளில் சோதித்துப் பார்த்தபோது அவற்றின் உடல் எடை கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல மனிதர்களிலும் இது வெற்றியைத் தந்திருக்கிறது. ஆனால் இதை செயற்கையாக ஆய்வுக்கூடங்களில் உருவாக்குவது அவ்வளவு சுலபமானது அல்ல.

 

 இதற்கு தான் இயற்கையாக இது கிடைக்கக் கூடிய தாவரங்களை ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.

 

 அந்த வகையில் சீனாவில் பல நூறு ஆண்டுகளாக மருத்துவத்திற்கு பயன்படும் 'தண்டர் கார்ட் வைன்'என்ற ஒரு செடியில் இயற்கையாகவே இந்த வேதிப்பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

 

 இந்தச் செடியில் ஏராளமான நச்சுத்தன்மை இருப்பதால், நமக்குத் தேவையான மருந்தான இந்த வேதிப்பொருளை மட்டும் அதிலிருந்து பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் ஈஸ் எனப்படும் பூஞ்சியை வைத்து சுலபமாக பிரித்தெடுக்கும் வழியை, டென்மார்க்  நாட்டைச் சேர்ந்த கோப்பென் ஹேகன் பல்கலையைச்  சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

 இவ்வாறு பூஞ்சை மூலம் மருந்து பிரித்தெடுப்பது, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். அத்தோடு இந்த முறையில் அதிக அளவிலான சிலஸ்ட்ராலை உருவாக்க முடியும்.

 

 அவ்வாறு உருவாக்கினால் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கும் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

 

👃மூக்கின் வழியே மருந்து

கொரோனா பெருந்தொற்று இப்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; என்றாலும் கூட, சில இடங்களில் உருமாறிய நிலையில் வைரஸ் பரவிக் கொண்டுள்ளது. இதைத் தடுக்க தடுப்பூசிகளை விட, மூக்கின் வழியே எடுத்துக் கொள்ளப் படும் தடுப்பு மருந்து அதிக பலன் தரும் என, சிங்கப்பூரைச் சேர்ந்த டியூக் மருத்துவ மையம் கண்டறிந்துள்ளது.

 

 

🏥சிகிச்சையின் பலனை அதிகரிக்க

ஆடோபேஜி என்பது வேதியியல் முறையிலான புற்றுநோய் சிகிச்சைக்கு துணையாகப் பயன்படும் ஒரு நவீன சிகிச்சை முறை. இந்த சிகிச்சையின் பலனை அதிகரிக்க, கார்பன் மோனாக்ஸைடாலான நுரைகளை பயன்படுத்துவது நல்ல பலனை தரும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

தொகுப்பு :செ.மனுவேந்தன்0 comments:

Post a Comment