விஞ்ஞானம் வழங்கும் விந்தைகள்

அறிவியல்=விஞ்ஞானம்

💣புற்றுநோய் கண்டறியும் 

புற்றுநோய் ஒரு கொடிய நோய். ஆரம்பத்திலேயே அதைக் கண்டுபிடித்தால் மட்டுமே நோயாளிகளைக் காப்பாற்ற முடியு ம். அதிலும் குறிப்பாக, குடல் புற்றுநோயைக் கண்டறிய தற்போதுள்ள முறைகள் அதிக செலவு எடுப்பவை, எளிமையானவை யும் அல்ல. உலகம் முழுதும் அதிகரித்து வரும் இந்தப் புற்றுநோயைச் சுலபமாகக் கண்டறிய அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை விஞ்ஞானிகள் பாக்டீரியாவைப் பயன்படுத்தும் புது முறையைக் கண்டறிந்துள்ளனர்.

கோலை நிசில் (E. coli Nissle) என்ற இந்த பாக்டீரியா மனித உடலுக்கு நன்மை செய்கிறது. இதை ஏற்கனவே குடல் நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இது மிக இயல்பாகவே புற்றுநோய் கட்டிகள் நோக்கி ஈர்க்கபடுகிறது. இதற்கு இருக்கும் இந்தத் தனித்துவமான பண்பை விஞ்ஞானிகள் புற்றுநோயைக் கண்டறிய பயன்படுத்தி உள்ளனர். இந்த பாக்டீரியா, கட்டிகளை அடைந்ததும் சாலிசிலேட் (Salicylate) எனும் ஒரு மூலக்கூறை உற்பத்தி செய்யும்படியாக விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்தனர். பின்பு அவற்றை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், லிகளுக்கு வாய் வழியாகக் கொடுத்தனர்.

உடலுக்குள் சென்ற பாக்டீரியா, கட்டிகளைச் சரியாகச் சென்று சேர்ந்தன. சேர்ந்த உடன் எதிர்பார்த்தபடி மூலக் கூறை உருவாக்கின. இந்த மூலக்கூறு ரத்தத்தில் கலந்தது. இது ரத்தப் பரிசோதனையில் தெரிந்தது. ஆரோக்கியமான எலிகள், மனிதர்களுக்கு தரப்பட்ட பாக்டீரியா இப்படியான மூலக்கூறை உற்பத்தி செய்யவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த எளிமையான, அதிகம் செலவாகாத முறை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

↠↠↠↠↠↠↠↠↠

🌳மின்சாரம் தயாரிக்கும் செடி.

மரபு சார் எரிபொருட்களான புதைப்படிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்க ப்படுகிறது. இதற்கு மாற்றாகவே மரபு சாரா ஆற்றல்களான சூரிய ஆற்றல், காற்றாலை, நீர் மின் ஆற்றல் ஆகியவை பயன்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலும் ஏதேனும் ஒன்று தான் ஒரு சாதனத்தில் பயன்படுகிறது.

ஆனால், சூரிய ஒளி, மழைத்துளி ஆகிய இரண்டில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் தாவர வடிவ புது சாதனத்தை அமெரிக்காவி ல் உள்ள போஸ்டன் வடகிழக்குப் பல்கலை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இதில் உள்ள இலைகளில் டெப்லான், நைலான் நானோ நார்கள் ஆகியவை இருக்கும். காற்றடித்து இலைகள் அசையும் போது இவற்றுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு மின்னோட்டம் உற்பத்தி ஆகும். இதை தாமிர எலெக்ட்ரோட்கள் மின்சாரமாக மாற்றும்.

அதேபோல் மழைத்துளிகள் விழும்போது ஏற்படும் சலனமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இப்படியாக உற்பத்தி ஆகும் மின்சாரத்தைக் கொண்டு 10 எல்..டி., பல்புகளை எரிய வைக்க முடியும். சிறிய அளவில் வெற்றி பெற்றுள்ள இந்த சாதனத்தைப் பெரியளவில் செய்தால் முற்றிலும் புதுமையான வழியில் மின்சாரம் தயாரிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 ↠↠↠↠↠↠↠↠↠

🐦கழுகு-ட்ரோன்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கழுகு போன்ற தோற்றமுடைய ட்ரோனை வடிவமைத்துள்ளனர். மற்ற பறவை வடிவ ட்ரோன்கள் போல் இது இறக்கைகளை அசைக்காது, மாறாக கழுகுகள் போல் இறக்கையை நிலையாக வைத்துப்பறக்கும். இத்தகைய வடிவமைப்பு காரணமாக பேட்டரி மின்சாரம் பெருமளவு சேமிக்கப்படுகிறது. இந்த ட்ரோன் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

 ↠↠↠↠↠↠↠↠↠

🚰வைரசையும் வடிகட்டும் எளிய வடிகட்டி

மாசுபட்ட தண்ணீரைச் சுத்திகரிக்க பல நவீன முறைகள் வந்துவிட்டன. எல்லாவற்றிலும் பெரும்பாலும் அதிக விலை மதிப்புள்ள வடிகட்டிகளே பயன்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குறைந்த விலையில் நவீன வடிகட்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

அசுத்தமான தண்ணீரை ஆறு, குளம் அல்லது ஏதேனும் நீர் நிலையிலிருந்து எடுத்து 1.5 லிட்டர் கொள்ளளவு உள்ள குழாய்க்குள் செலுத்தினர். குழாயிலிருந்து மெல்ல மெல்ல 'ஹைட்ரோஜெல்' வடிகட்டி வழியாகத் தண்ணீரை அனுப்பினர். இந்த 'ஹைட்ரோஜெல்' எண்ணற்ற நுண் ஓட்டைகள் உள்ள நானோ நார்களால் ஆனது. ஒவ்வோர் ஓட்டையும் 10 நானோ மீட்டர் விட்டம் கொண்டவை. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை இந்த அளவை விடப் பெரியவை என்பதால் இந்த வடிகட்டிகளில் மாட்டிக் கொள்ளும். வடிகட்டப்பட்ட தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வடிகட்டியை 30 முறை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பது தான். பயன்படுத்திய பின் துாக்கி எறிந்தாலும் மண்ணில் மக்கிவிடும். வடிகட்டிக்குத் தேவையான செல்லுலோஸ் இயற்கையில் மிகவும் அபரிமிதமாகக் கிடைக்கின்ற ஒரு பொருள். இதைத் தாவரங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளலாம். இதைப் பெபெரியளவில் வடிவமைக்க ஆய்வாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். இது பயன்பாட்டிற்கு வந்தால் கிராமப்புற , சிறு நகர மக்கள் மிகுந்த பயன் அடைவர்.

 ↠↠↠↠↠↠↠↠↠

🌊சுனாமியிலிருந்து மின்சாரம்!

சுனாமி எனும் ஆழிப் பேரலைகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றிலும் மிக மோசமான சுனாமிகள், அது உருவாகிய இடத்தி லிருந்து 1,000 கி.மீ., வரை உள்ள பகுதிகளில் கூட அழிவை ஏற்படுத்த வல்லவை. இத்தகைய மோசமான சுனாமி, பத்தாண்டுகளுக்கு இருமுறை வருகின்றன.

இவற்றை விட ஆபத்து குறைந்த ஆனால் பெரியளவில் சேதம் உருவாக்கும் சுனாமிகள் ஓராண்டிற்கு இருமுறை ஏற்படுகி ன்றன. உலகில் ஏற்படும் சுனாமிகளுள் 20 சதவீதம் ஜப்பானை ஒட்டியே ஏற்படுகின்றன. இதனால், தங்கள் நாட்டைக் காப்பாற்ற பல்வேறு அறிவியல் முறைகளை ஜப்பானியர்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஜப்பானின் முக்கியமான துறைமுகங்களில் சுனாமியின் பாதிப்பைக் குறைக்கவல்ல தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு , பயன்பாட்டில் உள்ளன. சுனாமி ஏற்படும்போது சமதளத்தில் இருந்து உயர்ந்து அலைகளைத் தடுக்கும் இந்தச் சுவ கள், சுனாமி நீங்கியதும் உடனே கீழிறங்க வேண்டும்.

கீழிறக்க மின்சாரம் வேண்டும். ஆனால், சுனாமி பாதித்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும். த்தகைய சூழலைச் சமாளிக்க டோக்கியோ தொழில்நுட்பக் கழகம் ஒரு யுக்தியைக் கையாண்டுள்ளது.

வழக்கமாக சுனாமியைத் தடுக்கும் சுவர்களுக்கு இடையே, 1 அடி உயர சிறிய சுவர் ஒன்றைப் பொருத்தினர். இதில் ' டர்பைன்கள்' இணைக்கப்பட்டன. சுனாமி அலைகள் இதில் மோதியவுடன் 'டர்பைன்'களின் இறக்கைகள் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தடுப்புச் சுவர்களை இயக்கப் பயன்படும். சராசரியாக இந்த 'டர்பைன்'களில் இருந்து 1,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment