கனடாவில்…முதியோர்

 
அவர்களுக்கான  நிதிமுறைத் திட்டங்கள்
வருவாய் பாதுகாப்புத் திட்டங்கள் (Income Security Programs)
சர்வீஸ் கனடா (Service Canada) [குறிப்பு: உங்கள் சமூகப் பாதுகாப்பு எண்ணை  (Social Insurance Number) தயாராக வைத்துக்கொள்ளவும்]
1-800-277-9914       TTY: 1-800-255-4786
முதியோர் பாதுகாப்பு (Old Age Security OAS) ஓய்வூதியம் என்பது, வயது, சட்டபூர்வ அந்தஸ்து மற்றும் 18 வயதுக்குப் பிறகு கனடாவில் வசித்த ஆண்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தது. இதில் இரண்டு வகைகள் உள்ளன - முழு ஓய்வூதியம் மற்றும் பகுதி ஓய்வூதியம். கனடாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல்  நீங்கள் வசித்திருந்தால், நீங்கள் பகுதி ஓய்வூதியத்துக்குத் தகுதிபெறலாம். OASக்கு வரி உண்டு. இதற்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் OAS கனடாவுக்கு வெளியிலும் தரப்படலாம்.
http://findlink.at/oldagesecu
உறுதியளிக்கப்பட்ட வருவாய் ஆதரவு (Guaranteed Income Supplement GIS) என்பது, கனடாவில் வசிக்கும் குறைந்த வருவாய் உள்ள, முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் (OAS) பெறும் நபர்களுக்கு வரியற்ற மாதாந்திர சலுகையை வழங்குகிறது. (எனவே, பகுதி OAS எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், பகுதி OASக்கு மட்டும் தகுதி பெறுவோருக்கு அவர்கள் கட்டாயம் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது முக்கியமாகிறது.) உறுதியளிக்கப்பட்ட வருவாய் ஆதரவு என்பது, உங்கள் வருடாந்திர வருவாய், அல்லது உங்களுடைய மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது பொதுச்சட்டப்படியான கூட்டாளி ஆகிய இருவரின் மொத்த வருவாய் எவ்வளவு என்பதன் அடிப்படையில் தரப்படுகிறது. உங்கள் வருடாந்திர வருவாய் ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் GISஐ புதுப்பிக்க வேண்டும்.
http://findlink.at/scgis
ஈட்டுப்படி (Allowance) என்பது, OAS மற்றும் GIS பெறுகிற நபரின் வாழ்க்கைத் துணை/பொதுச்சட்டப்படியான கூட்டாளிகளில் (எதிர்பாலைச் சேர்ந்த அல்லது ஒரே பாலினத்தைச் சேர்ந்த) 60-64 வயதுக்கு இடைப்பட்ட, குறைந்த வருவாய் உள்ள நபர்களுக்குத் தரப்படும் சலுகை ஆகும். 65 வயதில் இது நிறுத்தப்படும், அப்போது அந்த நபர் OASக்கு விண்ணப்பிக்க வேண்டும். இச்சலுகைக்கு வரி கிடையாது, ஆயினும் எழுத்து வடிவில் விண்ணப்பிக்க வேண்டும்.
http://findlink.at/allowance

சர்வைவர் ஈட்டுப்படி (Allowance for the Survivor) என்பது, OAS மற்றும் GIS பெற்றுவந்த நபரின் இறப்பிற்குப் பிறகு அவரது வாழ்க்கைத் துணை/பொதுச்சட்டப்படியான கூட்டாளிகளில் (எதிர்பாலைச் சேர்ந்த அல்லது ஒரே பாலினத்தைச் சேர்ந்த) 60-64 வயதுக்கு இடைப்பட்ட, குறைந்த வருவாய் உள்ள நபர்களுக்குத் தரப்படும் சலுகை ஆகும். 65 வயதில் இது நிறுத்தப்படும், அப்போது அந்த நபர் OASக்கு விண்ணப்பிக்க வேண்டும். இச்சலுகைக்கு வரி கிடையாது, ஆயினும் எழுத்து வடிவில் விண்ணப்பிக்க வேண்டும்.
http://findlink.at/allowsurv
GIS, ஈட்டுப்படி மற்றும் சர்வைவர் ஈட்டுப்படி ஆகியவை, கனடாவிலிருந்து புறப்படும் மாதத்திற்கும் அதற்குப் பிந்தைய 6 மாதங்களுக்கும் மட்டுமே கனடாவுக்கு வெளியே வழங்கப்பட இயலும்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட மற்றும் ஸ்பான்சர் செய்யப்படாத குடியேறிகள், 18 வயதுக்குப் பிறகு 10 ஆண்டுகளுக்கும் குறைவாக வசிப்பவர்களாக இருந்தால் - ஸ்பான்சர் இறந்து போனது போன்ற சில அசாதாரணமான சூழ்நிலைகளில் தவிர - ஸ்பான்சர்ஷிப் காலத்தில் - GIS, ஈட்டுப்படி அல்லது சர்வைவர் ஈட்டுப்படிக்குத் தகுதி பெற மாட்டார்கள்.
கனடா ஓய்வூதியத் திட்டம் (Canada Pension Plan CPP) என்பது வேலைநியமன அடிப்படையிலான, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இது கனடாவுக்கு வெளியிலும் வழங்கப்படக்கூடியது. CPP வழங்கல்களில் அடங்குபவை : பணிமூப்பு ஓய்வூதியம்; ஊனத்துக்கான நிதியுதவி; சர்வைவர் நிதியுதவிகள் (உயிரிழப்பு நிதியுதவி, சர்வைவர் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளுக்கான நிதியுதவி உள்பட்டது). பணிமூப்பு ஓய்வூதியத்தை 60-64 வயதில் (சற்று குறைவான தொகை எனற விகிதத்தில்); அல்லது 65 வயதில் முழுத்தொகை; அல்லது 65-70 இடைப்பட்ட வயதில் சற்று கூடுதல் தொகை என அவரவர் விருப்பப்படி தேர்வு செய்யலாம். ஓய்வூதியத்துக்காக எழுத்து வடிவில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், இந்த சலுகைகளை எப்போது பெறத் திட்டமிட்டுள்ளார்களோ அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் விண்ணபிக்க வேண்டும்.
http://findlink.at/cpp
சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் (Social Security Agreements) கனடாவில் அல்லது வேறொரு நாட்டில் வசித்தவர் அல்லது பணி புரிந்தவர் அந்த நாட்டிலிருந்து மற்றும் அல்லது கனடாவிலிருந்து நிதியுதவிச் சலுகைகள் பெற வழி செய்கின்றன. முதியோர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் கனடிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழான நிதியுதவிகள், இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட கனடிய நிதியுதவிகள் ஆகும். ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட மற்ற நாடுகளின் நிதியுதவிச் சலுகைகள், பணிமூப்பு, ஊனம் அல்லது உயிரிழப்பு என அந்த நாட்டின் ஓய்வூதியத் திட்டத்திற்கேற்ப மாறுபடும். கனடாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து மேலும் தகவல் பெற இந்த வலைதளத்தைப் பார்க்கவும் :
http://findlink.at/ssagreemen
Ministry of Revenue
1-866-668-8297       TTY: 1-800-263-7776
உறுதியளிக்கப்பட்ட வருடாந்திர வருவாய் முறை (Guaranteed Annual Income System, GAINS) என்பது, OAS மற்றும் GIS பெற்று வருகிற குறைந்த வருவாய் கொண்ட தகுதியுள்ள முதியோருக்கு ஒன்ராரியோ வருவாய்த் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. GAINS நிதியுதவிச் சலுகை பெற விண்ணப்பம் தேவை இல்லை. நீங்கள் ஒருமுறை OAS மற்றும் GIS பெறத் துவங்கி விட்டீர்கள் என்றால், GAINS சலுகைக்கும் நீங்கள் தகுதி மதிப்பீடு செய்யப்படுவீர்கள். முந்தைய ஆண்டில் உங்கள் (மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையின்) வருமான வரிப் படிவத்தில்(படிவங்களில்) உள்ள தகவல்களின் அடிப்படையில் இதற்கான தகுதி முடிவு செய்யப்படும்.
http://findlink.at/gains

ஆராய்ச்சியாளரிடமிருந்து அறிந்தவைகள்

நடனம் ……குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது
.கேம்ஸ் …..வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் படுசுட்டிகளாக திகழ்கின்றனர் என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகக்கழகத்தின் மனவியல் துறை சார்பில் லின்டா ஜாக்சன் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது .வீடியோகேம்கள் குழந்தைகளை
அதிபுத்திசாலிகளாக மாற்றுகின்றன.அவர்களது கற்பனை திறன் அபாரமாக அதிகரிக்கிறது. மேலும், இக்கட்டான சூழலில் உடனுக்குடன் எப்படி முடிவெடுப்பது என்ற ஆற்றல் அவர்களிடம் வளர்கிறது. இது நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு மிகமிக உதவிகரமாக இருக்கும். வீடியோகேம் ஆடும் குழந்தைகள் ஓவியம் வரைதல், கதை எழுதுதல் போன்றவற்றில் அசத்துகின்றனர். சிக்கலான புதிர்களுக்கு நொடிப்பொழுதில் விடை காண்கின்றனர். காரணம், வீடியோகேம் ஆடும்போது மனம் ஒருமுகப்படுகிறது. மூளை செயல்பாடுகள் சுறுசுறுப்படைகின்றன. எந்த வீடியோகேம் ஆடுகின்றனர் என்பதில் மட்டும் பெற்றோர் கவனமாக இருந்தால் போதும். அதிக நேரம் உட்கார்வதால், கண்ணுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். மற்றபடி, வீடியோகேம் என்றாலே அலற தேவையில்லை.
கண்……பொறந்ததுல இருந்து கண் கருப்பாவே இருக்கு.. போரடிக்குது’– இந்த ரேஞ்சுக்கு அலுத்துக் கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 20 நொடி லேசர் சிகிச்சையில் கண்ணின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமாம். அமெரிக்காவின் ஸ்டிரோமா கண்ஆராய்ச்சி மைய நிபுணர் க்ரேக் ஹோமர் தலைமையில் தீவிர ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  இதுபற்றி கிரேக் கூறுகையில், ‘‘லேசர் மூலம் 20 நொடியில் கண்ணின் பிக்மென்ட் (நிறமிகள்) நிறம் மாற்றப்படுகின்றன. இப்போதைக்கு கண்ணை பிரவுன், நீல நிறத்துக்கு மாற்ற முடியும். மற்ற கலர்களை கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் அதுவும் சாத்தியம் ஆகும். முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் உதவியுடன் இந்த சிகிச்சை நடக்கிறது’’ என்றார்.
பேட்டரி…வெறும் 15ம் நிமிடம் ரீசார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய செல்போன் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறைந்த நேரம் ரீசார்ஜ் செய்து, அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பேட்டரி தயாரிப்பில் வடமேற்கு வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் பேட்டரியை கண்டுபிடித்தனர். இது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் பேட்டரி தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு சக்திவாய்த்தது. இதை தொடர்ந்து எலக்ட்ரிக் கார் மற்றும் பல பயன்பாட்டுக்கான சக்தி வாய்ந்த பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வகை பேட்டரிகள் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவி ….ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால்உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது .. நமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் . குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி? வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும்? அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்? என்று தானே நினைகிறீர்கள்?ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள காற்றுகுளிராய்  இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது. உடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. குறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது.