சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை-ஜோக்ஸ்





-01-

 மனைவி: ஏங்க, நம்ம கல்யாண போட்டோவை ஏன் இவ்வளவு பெருசா ஹால்ல மாட்டி வச்சிருக்கீங்க?

கணவன்: எப்பெல்லாம் எனக்கு ஏதாவது பெரிய பிரச்சனை வருதோ, அப்பல்லாம் இந்த போட்டோவை பார்ப்பேன். பார்க்கும்போது இப்ப நடக்கிற பிரச்சனை எல்லாம் ரொம்ப சிறுசா தெரிஞ்சு  மனசுக்கு ஆறுதலா இருக்கும்!

 

-02-

கணவன்: (பயத்துடன்)சமையல் ரொம்ப சுவையாக இருந்தது.! இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?

மனைவி: ஒன்னும் இல்லங்க, சமைக்கும் போது யூடியூப்ல சீரியல் ஓடிட்டு இருந்தது. அதில ரமேஷ் தன்ர மனுசியோட ரொம்ப இனிமையாய் பேசி நடிச்சார் . அதான் உப்புக்கு பதிலா சர்க்கரையை கொட்டிட்டேன்!

 

-03-

மனைவி: ஏங்க, நான் அழகா இருக்கேனா இல்ல அறிவா இருக்கேனா?

கணவன்: நீ ரெண்டுமே இல்லைன்னு சொன்னா எனக்குத்தான் ஆபத்து. அதனால நீ ஒரு  "அதிசயம்"னு வச்சுக்கலாம்!

 

-04-

மனைவி: ஏங்க, நான் செத்துப்போனா நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: மாட்டேன்மா, ஒரு தப்பு செஞ்சா அது விபத்து. அதையே ரெண்டாவது தடவை செஞ்சா அது முட்டாள்தனம்!

 

-05-

மனைவி: ஏங்க, திருவிழாவில பார்த்திங்களா? பக்கத்து வீட்டுக்காரர் அவங்க மனைவிக்கு தினமும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறாங்க.. நீங்க ஏன் அப்படி பண்றது இல்ல?

கணவன்: நான் அவங்ககிட்ட பேசிட்டேன்மா, அவங்களுக்கு ஐஸ்கிரீம் ஒன்றுக்கு மேல குடிச்சா அலர்ஜியாம். அதனால வேணாம் என்கிறாங்க!

மனைவி:!!!!

 

-06-

மகன்: அப்பா, எனக்கு 100 ரூபாய் கொடுங்க.

அப்பா: எதுக்குடா?

மகன்: பாவமப்பா ஒரு வயதான ஏழை. நீண்ட நேரமாய் ரோட்டில் வெயிலுக்கை நிக்கிறார்.

அப்பா: முதியவரா? இந்தா 200 ரூபாய்,[கொடுத்தபின்] அங்க அந்த முதியவர் என்ன செய்யிறார்?

மகன்: ரோட்டோரமா ஐஸ்கிரீம் விக்கிறார் அப்பா.

அப்பா:.....!!!!

 

-07-

மகன்: அப்பா, கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எவ்வளவு செலவாகும்?

அப்பா: அது இன்னும் எனக்கு தெரியலடா மகனே... ஏன்னா நான் இன்னும் அந்த கடனை கட்டி முடிக்கல!

 

-08-

ஆசிரியர்: வரலாற்றிலே மிகக் கொடூரமான நபர் யாருன்னு சொல்லுங்க?

மாணவன்: பரீட்சை பேப்பரைத் திருத்துற எக்ஸாமினர் தான் சார்!

 

-09-

ஆசிரியர்: டேய், உன்னோட பரீட்சை பேப்பர்ல ஏன் எல்லாமே தப்பா இருக்கு?

மாணவன்: அது என் தப்பு இல்லை சார், நீங்க கேட்ட கேள்விகள் எல்லாமே தப்பா இருந்தது!

 

-10-

ஆசிரியர்: டேய், வகுப்பறையில ஏன் லேட்டா வர்றவங்களுக்குப் பின்னாடி நீயும் வர்ற?

மாணவன்: நீங்கதானே சார் சொன்னீங்க, "முன்னாடி போறவங்களைப் பார்த்து கத்துக்கோ"ன்னு!

 

-11-

மாணவன் 1: மச்சான், எங்க அப்பா நேத்து என்னை குட்டு ,குட்டு  எண்டு கடுமையாய் குட்டிப் போட்டாரடா..

மாணவன் 2: ஏன்டா, என்னாச்சு?

மாணவன் 1: ரேங்க் கார்டுல டீச்சர் "Good Progress" (நல்ல முன்னேற்றம்) என்று எழுதினாங்க. எங்க அப்பாவுக்கு இங்கிலீஷ் தெரியாது, என்னை வாசிச்சு காட்டிட சொன்னாரடா. நானும் வாசிச்சு காட்டினன். அவர் டீச்சர் எனக்கு குட்டச்சொல்லினார் எண்டு விளங்கிட்டாரடா!

 

-12-

மாணவன் 1: டேய், நீ ஏன் எப்பவும் கடைசி பெஞ்ச்லேயே உட்காருற?

மாணவன் 2: அங்கதான்டா காத்து நல்லா வரும், தூங்குறதுக்கும் வசதியா இருக்கும். டீச்சரின்ர குறட்டை சத்தமும் கேளாது.!

 

-13-

மாணவன் 1: மச்சான், நம்ம ஸ்கூல்ல இருக்கிற ஒண்டர்புல் பிளேஸ் (Wonderful Place) எது தெரியுமா?

மாணவன் 2: எதுடா? பெல் அடிக்கிற இடமா?

மாணவன் 1: இல்லைடா, ஸ்கூல் கேட்! அதைத் தாண்டி வெளிய போகும்போது வர்ற சந்தோஷமே தனிடா!

 

-14-

நோயாளி: டாக்டரே, என் பல்லு ரொம்ப வலிக்குது.

டாக்டர்: சரி, பல்ல பிடுங்கிடலாம்.

நோயாளி: ஐயோ, வலிக்குமே?

டாக்டர்: வலிக்காதுப்பா, நான் பிடுங்கும்போது என் கண்ணை மூடிக்குவேன்!

 

-15-

டாக்டர்: உங்க உடம்புல ரத்தமே இல்லை. தினமும் ஆப்பிள், மாதுளை, பேரீச்சம்பழம் எல்லாம் சாப்பிடணும்.

நோயாளி: சரிங்க டாக்டரே, இதை சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடணுமா இல்ல சாப்பாட்டுக்கு அப்புறமா?

 

-16-

நோயாளி: டாக்டரே, நீங்க கொடுத்த மருந்தை குடிச்ச உடனே எனக்கு தலை சுத்துது.

டாக்டர்: எந்த பக்கமா சுத்துது?

நோயாளி: வலதுபக்கமாய் டொக்ரர்.

டாக்டர்: அப்போ இனிக் குடிக்கும்போது இடது பக்கமாய் சுற்றிக்கொண்டு குடியுங்க!

நோயாளி: டொக்ரர் ,சுற்றுறது தலையையா? என்னையா?

 

-17-

டாக்டர்: உங்க கணவருக்கு முழு ஓய்வு தேவை. அதனால இந்த தூக்க மாத்திரையை வச்சுக்கோங்க.

மனைவி: இதை அவருக்கு எப்போ கொடுக்கணும் டாக்டரே?

டாக்டர்: இது அவருக்கு இல்லைமா, உங்களுக்கு! நீங்க தூங்குனா தான் அவருக்கு முழு ஓய்வு கிடைக்கும்!

 

-18-

டாக்டர்: உங்க எடையை குறைக்கணுமா? அப்போ தினமும் காலையிலயும் சாயங்காலமும் தலைகீழா நில்லுங்க.

நோயாளி: ஏன் டாக்டரே?

டாக்டர்: அப்போதான் உங்க வாய் தரையை நோக்கி இருக்கும், உங்களால எதுவும் சாப்பிட முடியாது!

 

-19-

டாக்டர்: எக்ஸ்-ரே (X-Ray) பார்த்தாச்சு. உங்க நெஞ்சு எலும்பு ஒடிஞ்சிருக்கு.

நோயாளி: ஐயோ டாக்டரே, இப்போ என்ன பண்றது?

டாக்டர்: கவலைப்படாதீங்க, போட்டோஷாப்ல அதை சரி பண்ணி மாத்தி தந்துடுறேன்!

 

-20-

நோயாளி: டாக்டரே, ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால வயலின் வாசிக்க முடியுமா?

டாக்டர்: கண்டிப்பா முடியும்ப்பா.

நோயாளி: ரொம்ப தேங்க்ஸ் டாக்டரே! ஏன்னா ஆபரேஷனுக்கு முன்னாடி எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாது!

 

-21-

நோயாளி: டாக்டரே, எனக்கு விக்கல் நிக்கவே மாட்டேங்குது.

டாக்டர்: (திடீரென்று மேசையை பலமாகத் தட்டி) ஏய்! மிரட்டலாகப் பார்க்கிறார்.

நோயாளி: (பயந்துபோய்) ஏன் டாக்டரே இப்படி பண்றீங்க?

டாக்டர்: இப்போ விக்கல் நின்னுடுச்சு பார்த்தீங்களா?

நோயாளி: விக்கல் நின்னுடுச்சு டாக்டரே, ஆனா பயத்துல இப்போ பேன்ட்ல ஒன்னுக்கு வந்துடுச்சு!

 

-22-

வக்கீல்: கவலைப்படாதீங்க, இந்த கேஸ்ல உங்களை நான் எப்படியாவது நிரபராதினு நிரூபிச்சு வெளில கொண்டு வந்துடுறேன்.

கிளையண்ட்: ரொம்ப தேங்க்ஸ் சார். அப்படி மட்டும் பண்ணிட்டீங்கன்னா, நான் நிஜமாவே திருடின அந்த 5 லட்சம் ரூபாயை உங்களுக்கே பீஸா தந்துடுறேன்!

 

-23-

வக்கீல்: உங்க கணவர் உங்களை அடிச்சதா சொல்றீங்களே, உங்ககிட்ட ஏதாவது சாட்சி இருக்கா?

மனைவி: சாட்சி எதுக்கு சார்? அந்த ஆளு இப்போ ஹாஸ்பிடல் ஐசியூ-ல (ICU) அட்மிட் ஆகியிருக்காரே... அது போதாதா?

 

-24-

நீதிபதி: ஏம்பா, இத்தனை சாட்சிகள் உன்னை திருடனா காட்டி குடுத்ததுக்கு அப்புறமும் நீ திருடலனு சொல்றியே?

திருடன்: சாமி, நான் திருடுறதை நேர்ல பார்க்காத 100 பேரை என்னால சாட்சிக்கு கூப்பிட முடியும். இவங்க 4 பேரை மட்டும் ஏன் நம்புறீங்க?

 

-25-

மகன்: அப்பா, நான் வளர்ந்த உடனே உங்கள மாதிரி வக்கீல் ஆகப்போறேன்.

வக்கீல் அப்பா: ஏன்டா?

மகன்: அப்போதான் பொய் சொன்னாலும் எனக்கு யாரும் தண்டனை கொடுக்க மாட்டாங்க, மேல காசும் தருவாங்க!

தீபம் நகைச்சுவை

0 comments:

Post a Comment