பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வைசிங்கப்பூர்
சிங்கப்பூர் குடியரசு ( The Republic of Singapore) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு. சிங்கப்பூர் ற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.
சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.
மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய நாடாகும். எனினும் அந்நியச் செலாவணியாக சிங்கப்பூரிடம் 172 பில்லியன் அமெரிக்க டொலர் உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உட்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 42%மானோர் வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர்.
                2010ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.1 மில்லியன் ஆகும். இதில் 3.2 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர்.
சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.
சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a comment