விமானம்- கேள்விகளும் பதில்களும்

விமானத்தில் பயணிக்கும்போது பல கேள்விகள் எழுவதுண்டு.அவற்றினை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

🛬1. விமானத்தின் ஜன்னல்கள் , பூமியில் ஓடும் வாகனங்களைப்போல் இல்லாமல் நீள் வட்டமாக இருப்பதேன்? 


விமானங்கள் வானில் பறக்கும் பொழுது விமானத்தின் வெளியைவிட , விமானத்தின் உள்ளேயும் அழுத்தம் அதிகமாக இருக்கும் இவ்விதம் காரணமாக விமானத்தினுள் காணப்படும் அழுத்தம் பரவுவதற்கு சதுர வடிவிலான கண்ணாடிகளின் மூலை தடங்கலாக இருக்கும் என்பதால் கண்ணாடிகள்  வெடித்து சிதற வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே அந்நிலையை தவிர்த்துக்கொள்வதற்காகவே  வட்டக் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் மேல், கீழ் வெளிப் பார்வையினை அதிகரித்துக்   கொள்வதற்காகவே நீள் வளைய ஜன்னல்கள் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

 

2. விமானங்கள் பறக்க ஆரம்பித்ததும் குறிப்பிட்ட எத்தனை  அடி உயரத்தினை நோக்கி சென்று பயணிக்கிறது?


விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி (6 மைல்) உயரத்திற்கு மேல் தான் பறக்கிறது.

 

🛦3. விமானங்கள் பறக்கும் பாதைகளின்  பகுதி எப்படிக் குறிக்கப்படுகிறது?


விமானங்கள் அடிவெளிப்பகுதி என குறிப்பிடக்கூடி ட்ரோப்போஸ்பியர் என்ற பகுதியில் தான் பறக்கிறது. இந்த பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 23 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 38 ஆயிரம் அடி உயரம் வரை இருக்கும். அந்த பகுதியை தான் விமானிகள் ஸ்விட் ஸ்பாட் என கூறுகிறார்கள்.

 

ஸ்விட் ஸ்பாட் என்பது விமானத்திற்கு விமானம் மாறுபடும். ஒவ்வொரு விமானத்தின் எடையை பொருத்தும் விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தால் சிறப்பான செயல்பாடு அமையும் என்பது கணக்கிடப்படுகிறது. குறிப்பாக அதிக எடை உள்ள விமானங்கள் உயரம் குறைவாகவும், எடை குறைந்த விமானங்கள் அதிக உயரத்திலும் பறக்க முடிவு செய்யப்படுகிறது.

 

🛩4. விமானம் பறப்பதற்காக இவ்வுயரம் தெரிந்தெடுக்கப்பட்டதன் காரணம் என்ன?


மேலே செல்ல செல்ல புவியீர்ப்பு சக்தியும் குறைவடையும். அத்துடன் இந்த பகுதியில் தான் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் விமானம் குறைந்த சக்தியிலேயே அதிக தூரம் பயணிக்க முடியும். எரிபொருள் செலவு பல மடங்கு இதனால் குறையும். எதிர்காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் தான். விரைவான  வேகத்தில் செல்லமுடிவதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.

 

🛨5. விமானம் பறப்பதற்கு-பயணிகளுக்கு  காலநிலை அங்கு பொருத்தமானதா?

 

சாதரணமாக பூமியில் 20 டிகிரி வெப்பம் உணரப்படும் போது 40 ஆயிரம் அடி உயரத்தில் -57 டிகிரியும், 35 ஆயிரம் அடி உயரத்தில் -54 டிகிரியும் உணரப்படும்.ஆனால் அந்த பகுதியில் காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் வானிலையில் அவ்வளவு எளிதாக மாற்றம் வந்து விடாது. மேலும் பொதுவாக மேகங்கள் அல்லது வானிலை தொடர்பான நிகழ்வுகள் (எ.கா., இடியுடன் கூடிய மழை) பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதனால் தான் விமானிகள் துணிந்து பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அதிக உயரத்தில் பறக்கும் விமானங்கள் எல்லாம் பிரஷரைஸ்டு கேபினை கொண்டது. அதாவது கேபினில் உள்ள பிரஷர் மூலம் வெளியில் உள்ள குளிர் எதுவும் உள்ளே வராது. உள்ளே தனியாக வெப்பம் பராமரிக்கப்படும்.

 

🛪6. விமானம் இறங்கவேண்டி, முகில்களுக்கு கீழ் வரும்போது காலநிலை மோசமாக இருந்தால் எப்படி கவனிக்கப் படுகிறது?


அதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை மேலதிக உதவி மற்றும் ஆலோசனைகளுக்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகளைப் பேணியவண்ணம் விமானிகள் செயற்படுவர்.


🛫7. 38,000 அடி உயரத்திற்கு மேல் விமானம் பறக்க முடியாதா?

 

இல்லை , மீறி செல்வது ஆபத்தானது, ஏனெனில் விமானத்தின் உகந்த  காற்று மிகவும் மெல்லியதாக மாறத் தொடங்குகிறது. மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக மாறத் தொடங்குகிறது, இதனால் எரிபொருள் இயந்திர அமைப்புகள் வேலை செய்வது கடினம். இதனால் விமானம் விபத்துக்குள்ளாகும்.


🛬8. குறிப்பிடட உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானம் , திடீரென சில மணி நேரம் மேலும் உயர்த்தப்படுவது ஏன்?

 

விமானம் பறப்பு உயரம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு என்றே விமானத்தினுள் காட்சிப் படுத்திக்கொண்டிருக்கும். கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான மலை சார்ந்த  நாடுகளை கடக்கும்போது அந்நாடுகளின் சட்டவிதிகளுக்கமைய விமானம் மேலும் உயர்த்தப்படுகிறது.


எங்கே? இனி விமானத்தில் ஏறித்தான் பார்ப்போமா!!

தொகுப்பு:செ.மனுவேந்தன்  


 

0 comments:

Post a Comment