இவ்வாரம் திரைக்காக .....
ராணி வேலு நாச்சியார்

இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக போராடிய வீரமங்கை தான் ராணி வேலு நாச்சியார். ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு, படமாக்கப்பட அந்தப் படத்தில் நாச்சியாராக நயன்தாரா நடிக்க  வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

 எட்டு கோடி நயன்தாரா 

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். நாலு கோடியாக இருந்த சம்பளத்தை தற்போது எட்டு கோடியாக மாற்றி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் நயன்தாராவின் பட வாய்ப்புக்கள்  பறிபோகிறதாம்.

 .டி.டி இல்

.டி.டி இல் வெளியிடப்பட்ட  ''.பெ ரணசிங்கம்'' , ''சூரரைப்போற்று'' , ''மூக்குத்தி அம்மன்'' திரைப்படங்களினைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 'பூமி', மாதவனின் ''மாற'' , விஷாலின் ''சக்ரா'' படமும் வெளிவர இருக்கிறது. விஜய் யின் ''மாஸ்டர்'' படமும் இணையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

 'ருத்ரன்'

தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கும் ராகவா லாரன்ஸ் பொல்லாதவன், ஜிகர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தலைப்பு 'ருத்ரன்'.

 வில்லனாக

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் 'எனிமி' படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இதுபோல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகும் 'புஷ்பா' படத்திலும் வில்லனாக நடிக்க ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 தனுஷ் 

செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய படத்தில் செல்வராகவன், தனுஷ் இணைகிறார்கள்.

 சாய்பல்லவி

மலையாளத்தில் சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படம் வெற்றி பெற்றதால் இதர மொழி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே, படங்களில் வந்தார். அவர் தற்போது தனது சம்பளம் ரூ.2 கோடியாக   உயர்த்தியுள்ளதாக  தெலுங்கு பட உலகில் தகவல்  உள்ளது.

 ஜெயலலிதா

ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியாக மதுபாலா நடித்து உள்ளார்.

 அமலாபாலும்.. 

தமிழ், இந்தி, தெலுங்கில்  முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, நித்யா மேனன், மீனா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். சூர்யா, விஜய்சேதுபதி, சத்யராஜ், காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர்.  தற்போது அமலாபாலும் வெப் தொடரில் தெலுங்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 பிரபுதேவா

பிரபுதேவாவும், காஜல் அகர்வாலும் பேய் படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். பிரபுதேவா கைவசம் தமிழில் மேலும் 4 படங்கள் உள்ளன.

 விஜய குமாரின் பேரனும்..

 தரமான குடும்ப படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின்  9 வயது மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான். ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும்.

📽தொகுப்பு:செமனுவேந்தன் [manuventhan] 📽

0 comments:

Post a Comment