சிரி...! 😼 சிரிக்க 🤣 சில நிமிடம் ...!


01.

மூளை மாற்று சிகிச்சை செய்யுமிடத்தில் மூளைகள் விலை பேசப்பட்டன. விஞ்ஞானியின் மூளை ஒரு லட்சம் ரூபாயாகவும், பேராசிரியரின் மூளை இரண்டு லட்சமாகவும், போலிஸ்காரரின் மூளை பத்து லட்சமாகவும் இருந்தது.

"போலிஸ்காரரின் மூளைக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை?" என்று ஒருவர் கேட்க, "ஏனென்றால்.. அது இன்னும் உபயோகப்படுத்தப்படவே இல்லை" என்று பதில் வந்தது.

02.

அவன் : "நான் இங்கே காரை நிறுத்தலாமா?"

போலிஸ் : "கூடாது"

அவன்: "மற்றவர்களெல்லாம் நிறுத்தியிருக்கிறார்களே!"

போலிஸ் : "அவர்கள் உன்னை மாதிரி என்னிடம் கேட்கவில்லையே!

03.

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.

போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"

அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."

மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."

போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."

மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"

போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."

மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"

அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."

போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"

மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படி பேசுவார்."

04.

அந்த ஆள் நேராகக் காரை ஓட்டாமல் அங்கும் இங்குமாக வளைத்து ஓட்டிக்கொண்டு சென்றான்.

போலிஸ்காரர் இடைமறித்து "எங்கே வாயை ஊதுங்கள்?" என்றார். அந்த ஆள், "எனக்கு ஆஸ்த்மா. என்னால் ஊத முடியாது" என்று கூற, உடனே போலிஸ் "அப்போ, காவல் நிலையத்திற்கு வந்து ரத்தம் சாம்பிளுக்குக் கொடு".

அவன் : "எனக்கு ரத்தசோகை இருப்பதால் முடியாது"

போலிஸ்: "அப்படின்னா, கீழே இறங்கி இந்த வெள்ளைக்கோட்டில் நேரா நடந்து காட்டு"

அவன்: "என்னால் அது முடியாது. நான் குடித்திருக்கிறேன்"

05.

ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை, அவங்களுக்கு காட்டத்தான்"

06.

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது."

07.

ஆள் -1 :ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிட்டேன், ஆனா மனசுக்குள்ள ரொம்ப பயமா இருக்கு!

ஆள்-2 : எதுக்கு பயம்? கடன் அதிகமாயிடுச்சா?

ஆள் -1 :இல்ல.. நிலம்தான் யாருடையதுன்னு தெரியல!

08.

பேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்?

நர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்!

09.

மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்த சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய மழை பெய்வதைக் கண்டு,

கணவன்: மேலோகம் போய் சேர்ந்த உடனே என்னுடைய மனைவி தன்னுடைய வேலையை ஆரம்பிச்சுட்டான்னு நினைக்கிறேன்.

10.

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?

இல்ல,தாத்தா சொல்றத கேக்குறதா?

11.

கணவன்::ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை..... 

மனைவி: அய்யய்யோ...அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

கணவன்:அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

தொகுப்பு:செ .மனுவேந்தன் [ manuventhan ]

0 comments:

Post a Comment