கிரிஸ்பி மிளகாய் சிக்கன்-சமையல்

{[வழங்கியவர் : அபிராஜசேகர் /ஆயத்த நேரம் : 20 நிமிடங்கள் /சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள் /பரிமாறும் அளவு : 4 நபர்கள்]}

தேவையானவை:

சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
எலுமிச்சை - அரை மூடி
கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்புதேவைக்கேற்ப
 செய்முறை:
1.]காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.
2.]சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
3.] 2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.
4 .]வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
5.]சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..

                                                                                               

0 comments:

Post a Comment