இலங்கைச் செய்திகள் -21/03/2019 [வியாழன்]

வெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடந்த  6 நாட்கள் செய்திகளைக்  கேட்கலாம்.


இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  21/03/2019 [வியாழன்]


இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  20/03/2019 [புதன்]

யாழில் குருதியில் போட்டு, திருமலையில் சடலம், சிவனொளிபாத மலையில் பதற்றம் , நகரங்கள் உதயம், மீண்டும் கஞ்சா  
↞↞↞↞↠↠↠↠
இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  19/03/2019 [செவ்வாய்]


இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  18/03/2019 [திங்கள்]


இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  17/03/2019 [ஞாயிறு]


இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  16/03/2019 [சனி]


இலங்கைச் செய்திகள் (srilanka tamil news)  15/03/2019 [வெள்ளி]


⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️⏹️

.
ஆண் என்பவன்..

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
🕴ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்.
 அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

----kanniyakumari

இந்தியா செய்திகள் 20,மார்ச் .2019

India news


TamilNadu news
💡💡💡💡💡20,March .2019💡💡💡💡💡

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பிரசாரம் தூத்துக்குடியில் நாளை தொடங்குகிறார்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வைகோ தலைமையிலான .தி.மு.. அங்கம் வகிக்கிறது. தேர்தலில் அக்கட்சிக்கு ஈரோடு தொகுதியும், ஒரு மாநிலங்களவைசீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு தொகுதி .தி.மு.. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் .கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில்பிரசார பீரங்கிஎன அழைக்கப்படும் .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ நாளை (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி

மார்ச் 22-ந்தேதி ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி, குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டம், 23-ந்தேதி தூத்துக்குடி தொகுதி (கோவில்பட்டி), விருதுநகர் தொகுதி (சாத்தூர், வெம்பக்கோட்டை), தென்காசி தொகுதி (ராஜபாளையம்) பொதுக்கூட்டம், 24-ந்தேதி தென்காசி தொகுதி (ஸ்ரீவில்லிபுத்தூர்), விருதுநகர் தொகுதி (கல்லுப்பட்டி, திருமங்கலம்), மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வைகோ பேசுகிறார்.

25-ந்தேதி நெல்லை தொகுதியிலும் (அம்பாசமுத்திரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை), 26-ந்தேதி வேலூர், அரக்கோணம் தொகுதிகளிலும், 27-ந்தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளிலும், 28-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும், 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஈரோடு தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் மீண்டும் தன் சுற்றுப்பயணத்தை வைகோ மேற்கொள்கிறார்.

மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை: 11 மாதங்களுக்கு பின் வெளியே வந்தார்
மதுரை சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் 11 மாதங்களுக்கு பின் வெளியே வந்துள்ளார்.

பேராசிரியை நிர்மலாதேவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி, கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை சி.பி.. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் நிர்மலாதேவிக்கு கடந்த 12-ந் தேதி ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.

உறவினர்கள் கையெழுத்திட்டனர்

அதை தொடர்ந்து நிர்மலாதேவியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை அவரது வக்கீல் பசும்பொன்பாண்டியன் செய்து வந்தார். அப்போது நிர்மலாதேவிக்கு அவரது ரத்த சொந்தங்கள் ஜாமீன் கையெழுத்து போட தயக்கம் காட்டியதால், அவர் சிறையில் இருந்து விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வக்கீல், அவருடைய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் நிர்மலாதேவியின் உறவினர்கள் ஜாமீன் ஆவணங்களில் கையெழுத்திட்டு, விருதுநகர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டு, நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. “ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக்கூடாதுஎன்ற நிபந்தனை நிர்மலாதேவிக்கு விதிக்கப்பட்டுள்ளது.

11 மாதங்களுக்கு பின்னர்...

இந்த நிலையில் மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம், நிர்மலாதேவி ஜாமீனுக்குரிய கோர்ட்டு உத்தரவை வக்கீல் வழங்கினார். அதை தொடர்ந்து 11 மாதத்திற்கு பின்பு நேற்று காலை சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை வக்கீல் பசும்பொன் பாண்டியன் அழைத்து வந்தார்.

அப்போது வக்கீல் நிருபர்களிடம் பேசிய போது, “நிர்மலாதேவி மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என்பதை நீதிமன்றம் மூலமாக நிரூபிப்போம். அந்த வழக்கில் இருந்து நிர்மலாதேவிக்கு விடுதலை பெற்று தருவோம்என்றார்.

அரியர் தேர்வுகளில் விடைத்தாள் முறைகேடு: 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்றஅரியர்தேர்வுகளில் விடைத்தாள்கள் மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான புகார் பூதாகரமாக பேசப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், விசாரணைக்குழுவை நியமித்தார்.

இதுதொடர்பாக அந்த விசாரணைக்குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இதில் அந்த தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பட்டியலை பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்குழு வழங்கியது.

பணி நீக்கம்

அதனைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்களை பணிநீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

அதில், ‘2017-ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அரியர் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. மாணவர்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு தற்காலிக பணியாளர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றி வைத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக வருகிற 28-ந்தேதிக்குள் மண்டல அலுவலகங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்கள்

பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தற்காலிக பணியாளர்களில் அலுவலக உதவியாளர்கள் தான் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மதுரையில் 80 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையிலும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் உத்தரவின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம், மதுரை மாவட்டம் மேலூர் சுங்கச்சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருமங்கலம் பகுதியில் .டி.எம். எந்திரங்களுக்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதனை பார்த்த போலீசார், உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வேனில் கொண்டு வரப்பட்ட தங்க கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து, முறையான ஆவணங்கள் கொண்டு வரும்படி வேனில் வந்தவர்களிடம் கூறினர்.

இதனையடுத்து, அந்த வேனை பறக்கும் படை அதிகாரிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பறிமுதலான தங்க நகைகள் குறித்து மதிப்பிடப்பட்டது.

வேனில் மொத்தம் 80 கிலோ தங்க கட்டிகள்-நகைகள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.16 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த தங்க கட்டிகள் மதுரையில் உள்ள நகை கடைகளுக்கு நகைகள் செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 80 கிலோ அளவுக்கு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது தொடர்பாக தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.

அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் .பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமார் .தி.மு.. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மஞ்சமலைசுவாமி கோவிலில் நேற்று சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

அவருக்கு ஆதரவாக துணை முதல்-அமைச்சர் .பன்னீர்செல்வம், தேனி தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்ட பகுதியான அலங்காநல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

பின்னர் .பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் .தி.மு.. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். .தி.மு.. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கம். இதில் உள்ள அடிப்படை கட்டமைப்பு தொண்டர்களால் அமைக்கப்பட்டது. எனவே .தி.மு.. ஆட்சிதான் தமிழகத்தில் நீடிக்கும்.

.தி.மு..வில் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி எதுவும் கிடையாது. தினகரன் கட்சியாலும், .தி.மு..வில் இருந்து பிரிந்து சென்றவர்களாலும் வாக்குகள் பாதிக்காது.

அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை. கட்சியில் செயல்பாடுகள் மற்றும் தகுதி அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்துநீட்நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம். மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும்நிதி ஆயோக்அமைப்பை கலைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அமைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முனைப்புடன் செயலாற்றுவோம்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களை கைவிட்டு, காவிரிப்பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க குரல் கொடுப்போம். முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய .தி.மு.. வழிவகை செய்யும்.

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்து நெல்லையை மையமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்துவோம். மதுரை-தூத்துக்குடி-கன்னியாகுமரி பாதையில் இரட்டை ரெயில் பாதையை விரைவாக அமைக்க குரல் கொடுப்போம். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கடுமையாக எதிர்ப்போம்.

கூடங்குளம் அணு உலை விரிவாக்க திட்டத்தை முழுமையாக கைவிடவும், இதனை எதிர்த்து போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறவும் பாடுபடுவோம். தேசிய மருத்துவ ஆணைய அவசர சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவையும் திரும்பப்பெற வேண்டும் என்று குரல் கொடுப்போம். பொது சிவில் சட்டம் கூடாது என்பதுடன், இலங்கை அரசின் கடற்தொழில் சட்டத்திருத்தம் செய்வதுடன், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க பாடுபடுவோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீதம் வழங்க தொடர்ந்து வலியுறுத்துவோம். சேலம்- சென்னை எட்டுவழி பசுமை சாலை திட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். இந்திய சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தின் பெயர் இடம் பெற வழிவகை செய்வோம்.

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடங்களை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம். சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை, கோவையில் ஐகோர்ட்டு கிளை, நீதிபதிகள் தேர்வு ஆணையம் அமைக்கவும் வலியுறுத்துவோம். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம், தமிழ் ஈழம் மலர, பொது வாக்கெடுப்பு நடத்துவது, 7 தமிழர்கள் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

தி.மு.. தேர்தல் அறிக்கை சிறப்புற அமைந்திட வழிகாட்டிய மு..ஸ்டாலினுக்கும், அறிக்கையை தயாரித்த குழுவுக்கும் பாராட்டு தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் முகிலனின் மனைவி பூங்கொடி பரபரப்பு பேட்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முகிலன் சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் ரெயில் திண்டிவனம் சென்றபோது முகிலனை திடீரென காணவில்லை.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 40 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதுடன், 251 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.சி..டி போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி (42) சென்னிமலையில் நேற்று தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கும், முகிலனுக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முகிலன் டி.எம்.. படித்துள்ளார். எங்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.
திருமணத்திற்கு முன்பே எனது கணவர் முகிலன் புரட்சிரக இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். என்னை விட அவருக்கு 10 வயது அதிகம். ஆனாலும் அவருடைய சமூக அக்கறை காரணமாக அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களுக்கு கார்முகில் (21) என்ற ஒரே மகன் உள்ளார்.
கார்முகில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உள்ளூரில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முகிலன் கலந்துகொண்டுள்ளார். நானும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்.
எங்கள் குடும்ப வருமானத்திற்காக மட்டுமின்றி சமூக போராட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக 1998-ம் ஆண்டு அச்சகம் அமைத்து 2 வருடங்கள் அச்சகத்திலேயே முகிலன் இருந்தார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அதன்பிறகு வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார்.
2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறை சென்றார். புரட்சிகர இளைஞர் முன்னணி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கூட்டியக்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தினார்.
அதனால் இவர் மீது 100-க்கும் மேற்பட்ட போராட்ட வழக்குகள் இருந்தது. 2014-ம் ஆண்டில் முகிலனே வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து திருச்சி சிறையில் 6 மாதம் இருந்தார். பின்னர் நீதிபதியே சொந்த ஜாமீனில் இவரை வெளியே விட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் முகிலன் கைது செய்யப்பட்டு 379 நாட்கள் சிறையில் இருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்த போராட்டத்தில் முகிலன் மிக தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.
சி.டி. வெளியிட்ட அன்றே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர் முகிலனிடம், தூத்துக்குடி கலவரம் குறித்த சி.டி. ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் கொடுங்கள் என்றும், இதை ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள்? என்றும் கேட்டுள்ளதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார்.
முகிலன் காணாமல் போனதற்கு ஓரிரு நாள் முன்பு காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். முகிலன் கலந்துகொண்ட போராட்டத்தில் பெண்களும் கலந்துகொள்வது உண்டு. அதுபோல நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.
என்னுடைய கணவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சில அரசியல்வாதிகள், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி உடன் இருந்தவர்களும் அவர் மீது தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதுபோல இவருடன் போராடிய பெண்ணோடு இணைத்து அவதூறு பரப்பி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு எதிராக எனது கணவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்துள்ளார். அதனால் இனி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம்.
கடந்த 2013-ம் ஆண்டுகூட ஒரு போராட்ட வழக்கில் போலீசார் இவரை யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர்.
இதுவரை பொது வாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்த முகிலன் மீது உடன் இருப்பவர்களே பரப்பி வரும் அவதூறுகளை முறியடித்து அவரை மீட்க போராடி வருகிறேன். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்என்றார்.

பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை - பொன்.ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கலந்துரையாடினார். இந்த கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மஹாலில் நடந்தது. அப்போது பா.ஜனதா அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் துறைமுக திட்டம் பற்றியும், துறைமுகம் வருவதால் ஏற்பட கூடிய நன்மைகள் பற்றியும் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 300–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அதே சமயத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டும். தேர்தல் அறிக்கை என்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு ஆகும். தாங்கள் அளிக்கும் தேர்தல் அறிக்கையை கட்சிகள் நிறைவேற்ற வேண்டும்.
பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை செய்து வருகிறது. பா.ஜனதா அரசு கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு புதியவர். எனவே போகப்போக அவருக்கு விவரம் புரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார். என்றார்.


⛳⛳⛳⛳⛳⛳⛳⛳19,March .2019 ⛳⛳⛳⛳⛳⛳⛳⛳

என்ஜினீயரிங் படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எவ்வளவு? அரசு ஆணை வெளியீடு
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஏற்கனவே பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (பி.சி.எம்.) பிரிவினருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு (எம்.பி.சி.) 40 சதவீதமும், எஸ்.சி.., எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 35 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் செய்து, புதிய தகுதி மதிப்பெண்களை உயர்கல்வி துறை நிர்ணயம் செய்து அரசு ஆணையாக வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான பி.., பி.டெக்கில் சேருவதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 45 சதவீதமும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அடிப்படையில் தான் 2019-2020-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணில், பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் ஏற்கனவே இருந்த மதிப்பெண்ணில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருந்த மதிப்பெண்ணில் இருந்து 5 சதவீதம் மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண் மாற்றம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியா? கமல்ஹாசன் பதில்
மக்கள் நீதி மய்யம் கட்சியோடு நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் .தி.மு.. கூட்டணியில் இருந்து விலகிய இந்திய குடியரசு கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியோடு இணைந்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய குடியரசு கட்சிக்கு
ஒரு நாடாளுமன்ற தொகுதியும், 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3-வது அணிக்கான வாய்ப்பை இந்திய மக்கள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். அது எங்கள் முனைப்பும் கூட. அதை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறோம். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர் முதல்-மந்திரி என்பதால் நேரம் கிடைக்கும்போது வருவார். கட்சியில் இருந்து விலகிய முன்னாள் செயற்குழு உறுப்பினர் குமரவேல் என் மீது குற்றச்சாட்டினை வைக்கவில்லை. வைத்தால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
கட்சி கட்டுப்பாட்டுக்குள் இயங்காதவர்கள் மீது என்ன செய்யவேண்டுமோ, அதனை கட்சி செய்துவிட்டது. நேர்காணலில் கலந்துகொள்வதற்கு முன்னதாகவே தான் வேட்பாளர் என்று தகவலை வெளியிட்டது தான் தவறு. பிரபலங்களும், பிரபலங்களாக உள்ளவர்களும் எங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். தி.மு.., .தி.மு.. தேர்தல் அறிக்கையாக கொடுத்த வாக்குறுதிகள் 50 வருடமாக சொல்லிக்கொண்டிருப்பது தான். அதன் தொடர்ச்சியாக தற்போதும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டணி எவ்வளவு முரண்பாடானதோ அதேபோல் தான் அவர்களின் தேர்தல் அறிக்கையும். விரைவில் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘உங்களின் ஆசைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிஎன்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.

முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி வைத்துள்ளோம். நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதியும், சட்டமன்றத்தில் 3 தொகுதிகளும் எங்களுக்கு வழங்கியுள்ளார்கள். கமல்ஹாசன் கட்சியின் சின்னம் கிராமங்களுக்கும் பரவியிருக்கிறது. நாங்களும் அதே சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமிழக மக்களின் நலன், உரிமை ஆகியவற்றில் மாற்று அரசியலை கமல்ஹாசன் முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது. இதையடுத்து 24-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
இலவச திட்டங்களை செயல்படுத்தும் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் அதிகாரி
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியதையடுத்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் வரத்தொடங்கிவிட்டனர். நாடாளுமன்றத் தொகுதி ஒவ்வொன்றுக்கும் தலா 2 செலவினப் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னைக்கு மட்டும் 3 செலவினப் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒரு தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர்தான் பணியமர்த்தப்படுவார்.

ஆனால் தேர்தல் செலவு விஷயத்தில் கவனிக்கத் தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே தமிழகத்தில் மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தலா ஒரு செலபினப் பார்வையாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 79 பேரும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான செலவினப் பார்வையாளராக 16 பேரும் (2 பார்வையாளர்கள் தலா 2 தொகுதிகளை பார்வையிடுவார்கள்).

நாடாளுமன்றத் தொகுதிகளில் மத்திய சென்னைக்கு மஞ்சீத் சிங் (09530993410), மஜும்தர் (08985970139), மங்கராஜூ (9172257521); தென்சென்னைக்கு குருபிரசாத் (09845255331), மர்ரப்பு நவீன் (9849095412); வடசென்னைக்கு சஞ்சீவ்குமார் தேவ் (09408792200), விவேகானந்த் (9935380337); திருவள்ளூருக்கு முகேஷ் கட்டாரியா (09953694841), பிரவீன்குமார் (98911381910); ஸ்ரீபெரும்புதூருக்கு அமீஷ் அகர்வால் (9953909178), அர்ஜூன் லலியத் (08130144488); காஞ்சீபுரத்துக்கு பூபேந்திரசிங் அனந்த் (9408792047), சுஜித்குமார் (09449073437) ஆகியோர் செலவினப் பார்வையாளராக வந்துள்ளனர்.

இடைத்தேர்தல் நடக்கும் சட்டமன்ற தொகுதிகள் பூந்தமல்லிக்கு பிரவீன்குமார் (9891138191), பெரம்பூர்- விவேகானந்த் மவுரியா (9935380337), திருப்போரூர்- பூபேந்திர சிங் ஆனந்த் (9408792047), ஆகியோர் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்றுவிடுவார்கள். வேட்புமனு பரிசீலனையின்போது பொதுப் பார்வையாளர்கள் வருவார்கள்.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இலவச திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும்போது, அந்தத் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?, அதற்கான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது? என்ற விளக்கங்களையும் அதோடு அந்தக் கட்சிகள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதற்கான விளக்கத்தை அந்தக் கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்கும்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பதாக ஏற்பாக செயல்படுத்துகிற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு, அதாவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு அந்தத் திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க முடியாது.

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக இதுவரை 9 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 130 ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 18-ந் தேதி மட்டும் 2 கோடியே 25 லட்சத்து 96 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுதவிர தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி கடன் ரத்து செய்யப்படும் :
அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை
தமிழக அரசியலில் .தி.மு..வும், தி.மு..வும் எதிர், எதிர் துருவங்களாக இருந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இரு கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளை நடத்தி முடித்து இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் .தி.மு.. தரப்பிலும், தி.மு.. தரப்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரையில் நடந்த தேர்தல் காலங்களில் .தி.மு..- தி.மு.. வேட்பாளர் பட்டியல் ஒரே நாளில் வெளியானது இல்லை.

தற்போது மேலும் ஒரு ஒற்றுமையாக .தி.மு.. தேர்தல் அறிக்கையும், தி.மு.. தேர்தல் அறிக்கையும் நேற்று வெளியிடப்பட்டது.

இரு கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் பல ஒற்றுமைகள் காணப்பட்டன. மத்திய அரசை வலியுறுத்தும் பல கோரிக்கைகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு, மக்களுக்கு உறுதிமொழியாக தரப்பட்டுள்ளது.

மேலும் மாணவ- மாணவிகளின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், மத்திய அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும், புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளும் .தி.மு..- தி.மு.. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கான கடன்கனை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.. வலியுறுத்தி இருந்தது. கடன்களால் அல்லல்படும் விவசாயிகளுக்கு கடன் சுமையை நீக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று .தி.மு.. தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில்
இன்று எந்த மாற்றமும் இல்லை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.59 காசுகளாகவும், டீசல், லிட்டருக்கு ரூ.70.59 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
கோவா சட்டப்பேரவையில் இன்று
நம்பிக்கை வாக்கெடுப்பு
கோவா முதல்-மந்திரியாக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு முதல்- மந்திரி நாற்காலி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. 40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் 14 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து வலியுறுத்தினர்.
ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதன் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.), கோவா பார்வர்டு கட்சி (ஜி.எப்.பி.) ஆகியவற்றுக்கு தலா 3 உறுப்பினர்களும், சுயேச்சைகள் 3 பேரும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இந்த நிலையில் கோவா சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த் (வயது 46), புதிய முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆயுர்வேத மருத்துவரான இவர், மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் தீவிர ஆதரவாளர் ஆவார். பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பனாஜியில் உள்ள கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரி பிரமோத் சாவந்துக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
கோவாவில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா வாய்ப்பு வழங்கியதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.இதையொட்டி மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில்
காவாதாங்கர் விடுத்துள்ள அறிக்கையில், “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியை அரசு அமைக்க அழைக்காத கவர்னர் மிருதுளா சின்காவின் செயல் கண்டனத்துக்கு உரியது. ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும், பாரதீய ஜனதா கட்சி குதிரைப்பேரம் நடத்த வழிவகுத்து விட்டார். கவர்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்என சாடி உள்ளார்.
இதற்கிடையே கோவா சட்டசபையில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இன்று (புதன்கிழமை) நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்கான அழைப்பை கவர்னர் விடுத்துள்ளார்.

சரக்கு, சேவை வரி குறைப்பு எதிரொலி: வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகை
கடந்த மாதம் 24–ந் தேதி டெல்லியில் நடந்த 33–வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதை செயல்படுத்தும்விதம் பற்றி டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்த 34–வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அது வருமாறு:–
* ஏப்ரல் 1–ந் தேதிக்கு முன்னர் பதிவு செய்து கட்டுமானப்பணிகள் நடந்து வருகிற வீட்டு வசதி திட்டங்களுக்கு பழைய சரக்கு, சேவை வரியை தொடர்வது பற்றி முடிவு எடுப்பதற்கு வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும். இது வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகையாக அமைகிறது.

* புதிய வீட்டு வசதி திட்டங்களை பொறுத்தமட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு உள்ளீட்டு வரி சலுகையின்றி 1 சதவீத வரி அமல்படுத்தப்படும். குறைந்த விலை வீடு என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானித்தபடி, மாநகரங்கள் தவிர்த்த நகரங்களில் 60 சதுர மீட்டர், மாநகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கலாம். வீட்டின் விலை ரூ.45 லட்சம் வரை இருக்கலாம்.


* குறைந்த விலை வீடுகளை தவிர்த்து பிற வீடுகளுக்கு அவை ஏப்ரல் 1–ந் தேதியோ, அதற்கு பின்னரோ பதிவு செய்து இருந்தால் அவற்றுக்கு உள்ளீட்டு வரி சலுகையின்றி 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ஏப்ரல் 1–ந் தேதிக்கு பின்னர் தவணை செலுத்தக்கூடிய வீடுகளுக்கும் இது பொருந்தும்.

  🚩🚩🚩🚩🚩🚩🚩🚩   🚩🚩🚩🚩🚩🚩🚩🚩