ஒரு அப்பாவின் தியாகங்கள் - short film




இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது. கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

🧡அப்பாவிற்கு_அழத்தெரியாது!!

குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!

💛பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!

என்னடா வாழ்க்கை இது என

#ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!

💙 மனைவியை நெஞ்சில் சுமந்து!
💜 பிள்ளைகளை தோளில் சுமந்து!
🖤 குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!

போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!

தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!

#நாம்_அவரை_கல்லெனவே #நினைத்துவிட்டோம்!

💗அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
💓 அப்பாவிடம் எட்டி நிற்போம்!
💖முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!

ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில்

#ததும்பும்_ஜீவன்_அது!

*நாம் திண்ணும் சோறும்!
உடுத்தும் உடையும்!
படித்த படிப்பும்!

அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!

நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!

#அப்பாவின்_பாசத்தை_உணரக்கூட #இல்லையோ!

🗣நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!

வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!

நம் வாழ்க்கையின் பின்னால்…

#அப்பா_எப்போதுமே_இருப்பார்!

💝 அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
💟அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
🚫 அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!

#அந்த_பைத்தியத்திற்கு
#அழவும்_தெரியாது!

🐏வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!

#நம்_சந்தோசத்திற்காகவே_எதையும் #தாங்கும்_ஆன்மா_ அவர்!

💞பாசமோ!
மன்னிப்போ!
😢 அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!

😭 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
மரணமோ!
😭 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!

😓உங்களை புரட்டி போட்டு!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிடும்போது!

😁வீட்டில் அப்பா…
சிரித்துக்கொண்டிருக்கலாம்…

புகைப்படத்தில்!!
✏ ✏ ✏ ✏ ✏Sri Kanaka✏ ✏ ✏ ✏ ✏

0 comments:

Post a comment