சித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04



சிவவாக்கியம்-035

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே .

கோயில் என்பது என்னகுளங்கள் ஆவது எது?என்பதை அறியாமல் புறத்தில் அமைந்துள்ள கோயில்களையும்குளங்களிலும் தீர்த்தமாடி வணங்கிவரும் எம்குலமக்களே ! நமது உடம்பினுள் கோயிலாகவும்குலமாகவும் மனமே அமைந்துள்ளது. அம்மனதை நிலைநிறுத்தி தியானித்தால் ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். அவ்வான்மா என்றும் நித்தியமாக உள்ளது என்பதையும் அது உற்பனம் ஆவதும் இல்லை உடம்பைப் போல் அழிவதும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -036

செங்கலும் கருங்கலும் சிவதசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பாதம் அறிந்து நீர் உம்மை நீய் அறிந்தபின்
அம்பலம் நிரந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே!

செங்கற்களாலும்கருங்கற்களாலும்சிகப்பு நிறம் பொருந்திய சாதி லிங்கத்திலும்செம்பினாலும்தராவினாலும் செய்யப்பட்ட சிலைகளிலும் சிவன் இருக்கிறான் என்கின்றீர்களே! உம்மிடம் சிவன் இருப்பதை அறிவீர்களாஉம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தையும் அதனால் அடையும் நாதலயமும் கிடைத்து இன்புறலாம்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -037

பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமோ

கால நேரம் தவறாமல் பூசை செயம் பக்தர்காள்பூசை என்றால் என்ன என்பதை அறிவீர்களா?  "பூ" என்பது நமது ஆன்மா. "சை" என்பது அசையாமல் நிறுத்துவது. இதுவே உண்மையான பூசையாகும். இந்த பூசையை நமக்குள்ளேதான் செய்ய வேண்டும். ஆன்மாவான பூவை அது எந்த இடத்தில் இருக்கிறதோ அன்க்கேயே நினைத்து நினைத்து நிறுத்தி அசையாமல் இருத்துவதே பூசை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை யோக தியானத்தால்தான் நமக்குள்ளே செய்ய வேண்டும். இதை விட்டு நீங்கள் செய்கின்ற பூசைகள் யாவும் புறச்சடங்குகளே. ஆதியான சக்தியோ அநாதியான சிவனோ இந்த பூசையை ஏற்றுக் கொண்டார்களாஎல்லாவற்றிற்கும் மூலமாக, எல்லாப் பொருட்களுமாக இருக்கும் இறைவனுக்கு அப்பொருட்களையே படைப்பது எவ்வாறு சாத்தியம்? இரண்டாக இருக்கும் பொருட்களில் ஒன்றை மற்றொன்றுக்குப் படைக்கலாம். ஒரே பொருள் இருக்கும்போது அதையே அதற்கு படைப்பது நடக்குமா?

 ஆதலால்  தியானியுங்கள். அதனை ஆதியாகவும் அனாதியாகவும் நம் உயிரில் உறையும் சிவனும்சக்தியும் ஏற்றுக் கொள்வார்கள். 

*அன்புடன் கே எம் தர்மா..[தொடரும்]

0 comments:

Post a Comment