இன்று வர்ணத்திரையில் .....


கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கி வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. அதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் " கமல் ஹாசன் 232 " படமும் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தான் என்று அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்த போஸ்டரில் அறிவித்துவிட்டனர். இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார்.

 

ஹிந்தியில் வெற்றிபெற்ற அந்தாதுன் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழில் பிரசாந்த் நடிக்க உள்ள நிலையில்  தபு வேடத்தில் தமன்னா நடிக்க நவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

 

மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக சைக்கோ படம் தான் திரைக்கு வந்திருந்தது. இந்த வருடம் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வந்த அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகிறார். அந்த படத்தில் பேயாக நடிப்பதற்காக அவர் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

 

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து டாப்ஸி உடன் இணைந்து டபுள் ரோலில் ''அனபெல் சுப்ரமணியம்''காமெடி ஹாரர் கதையில்  நடிக்க  ,பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

 

மாதவனுடன் ,  காது கேட்காதவராக , வாய் பேச முடியாதவராக அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் வரும் அக்டோபர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.முக்கிய ரோல்களில் அஞ்சலி, அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சிம்பு அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு கிராமத்து கதையில் நடிக்க உள்ளார். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட காலத்தின் முன் கடைசியாக ஹரி இயக்கத்தில் 'கோவில்' கிராமத்து கதையில் தான் அவர் அப்படி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தொகுப்பு :செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment