சினிமா:-


கடந்த 30  நாட்களில் வெளிவந்த   திரைப்படங்கள்
2011-07-10:--தேனீர் விடுதி
நடிகர்கள்:ஆதித், புதுமுகம் ரேஷ்மி
கதை: நாயகனும், நாயகியும் தடைகளை எவ்வாறு தகர்த்தெறிந்து இணைந்தனர் என்பதும் தான் கதை!
கருத்து: நிறம்,மனம்,குணம் இல்லாத தேநீர்.
புள்ளிகள்:30
2011-07-10:--அரும்புமீசை குறும்புபார்வை
நடிகர்கள்:  சந்துரு, ஹாசினி
கதை: விடுதியில் தங்கிக்கல்வி பயிலும் மாணவரின் அவலங்களையும்,அபிலாசைகளையும் கூறும் கதை.
கருத்து: இருக்கிற வெள்ளத்தையும் அடித்துச் செல்லாம இருந்தாச் சரி.
புள்ளிகள்: 50

2011-07-10:-- ஆண்மை தவறேல்
நடிகர்கள்:  துருவா, ஸ்ருதி
கதை: தனி மனித ஒழுக்கம்தான் மனித இனத்தின் உயர்வு என்பதை சொல்லும் கதை.
கருத்து: பெண்களை மீண்டும் பொம்மைகளாய் காட்ட முயற்சித்துள்ளார்கள்.
புள்ளிகள்:45
2011-07-10 :--ஆரண்ய காண்டம்
நடிகர்கள்:  ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, சம்பத்.
கதை: காட்டு மிருகங்களைப் போல் நாட்டில் வாழும் மிருகத்தனமான மனிதர்களைப் பற்றிய படம் இது.
கருத்து: சண்டை இரசிகர்கள் பார்த்து மகிழலாம்.
புள்ளிகள்: 45
2011-07-10:-- பிள்ளையார் தெரு கடைசி வீடு
நடிகர்கள்: நடிகர் : ஜித்தன் ரமேஷ், சஞ்சிதா படுகோனே
 கதை: பிள்ளையார் தெரு கடைசி வீட்டில் வசிக்கும் ஒரு இளைஞனை பற்றிய காதல்  கதை இது.
கருத்து: பழைய வாழ்வே மாயம் படத்தினை புதிய சாயம் போட்டு படைத்துள்ளார்கள்.  
புள்ளிகள்: 50
2011-07-03:-- உதயன்
நடிகர்கள்:  அருள்நிதி, ப்ரனிதா, சந்தானம்.
கதை: ஒரு கொலைக்கு காரணமானவனை தேடும் தேடுதல் வேட்டை தான் கதை.
கருத்து: சுமார் 
புள்ளிகள்:40
2011-06-19:-- அவன் இவன்
நடிகர்கள்: ஆர்யா, விஷால், சூர்யா, மதுஷாலினி, அம்பிகா.
கதை: சில சம்பவங்களின் தொகுப்புதான் இத்திரைப்படம்..!
கருத்து: அவன்-இவன்  பார்க்க வேண்டிய திரைப்படம்..!
புள்ளிகள்: 55
2011-06-27:-- 180
நடிகர்கள்: சித்தார்த், ப்ரியா ஆனந்த்
கதை: இரண்டு விபத்துகளால் பற்றிக் கொள்ளும் இரண்டு காதல்களும்.... இரண்டோடு சம்பந்தப்பட்ட, ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழக்கூடிய, அமெரிக்க வாழ் தமிழ் டாக்டரின் மனப்போராட்டங்களும்தான் நூற்றெண்பது.
கருத்து: நூற்றெண்பது வசீகரம்.
புள்ளிகள்:45




0 comments:

Post a Comment