இந்தியாவின் முன்னணி இணையத்தள சேவை நிறுவனம் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ். கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மென்பொருள் உருவாக்கம்(Software Development), இணையத் தள வடிவமைப்பு (Website Design) உள்ளிட்ட பல்வேறு தரமான சேவைகளை வழங்கி வருகிறது எம் நிறுவனம். வளரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் C Pad எனும் கணிப்பலகை(Tablet Pc)வடிவமைக்கப்பட்டுள்ளது. . பெரிய பெரிய கணினிகளில் செய்யும் பணிகளை மிக எளிமையாகச் செய்யும் அளவிற்கு C Pad கணிப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
7 இன்ச் அகலமும் 1/2 கிலோ எடையும் கொண்ட இக் கணினியை நாம் கையிலேயே எங்கும் எடுத்துச் செல்லலாம். எல்லா இடங்களிலும் இன்டர்நெட்டைக் (Internet) கனெக்ட் செய்யலாம். WiFi, 3G, Lan Cable ஆகியவற்றின் வழியாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். வீடியோ, ஆடியோ ரெக்கார்டர் என எல்லா வசதிகளும் இந்த C Pad கணிப்பலகையில் உண்டு. மேலும் தமிழில் மின்னஞ்சல் செய்திடவும் , பெற்றிடவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
கூகிள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த ஆன்டிராய்டு இயங்குதளத்தில் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வருடத்தின் இறுதியில் இம்மென்பொருட்கள் கோடிகளை அடையும் என்பது எதிர்பார்ப்பு
100 ரூபாய்க்கு அன்லிமிடட் இன்டர்நெட் இணைப்பு.
குழந்தைகளின் கல்வியில் தொடங்கி வியாபாரிகள், நிறுவனங்கள், மருத்துவர்கள் என எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த C Pad கணிப்பலகையை வெகு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வளர்ந்து வரும் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையை ஏற்றமுறச் செய்ய இந்த C Pad கணிப்பலகை.
வாங்குங்கள்! வாழ்த்துங்கள்!!
ஒன்று சேர்ந்து சிகரம் தொடுவோம்!!!.
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.
காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.
இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.
லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.
இந்த வருடம் லாஸ் வேகசில் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் ஏராளமான டேப்லெட்டுகள் மற்றும் கெட்ஜெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் போட்டி அதிகமாக இருந்தது. மேலும் புதிய நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். அவ்வாறு புதிதாக அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் வந்த டேப்லெட்டின் பெயர் இஸட்டிஇ டி98 ஆகும்.
இந்த இஸட்டிஇ டி98 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் 7 இன்ச் அளிவில் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுபோல் என்விடியா டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் கேமரா மற்றம் ஜிபிஎஸ் வசதிகளும் உண்டு.
இஸட்டிஇ டி98 டேப்லெட் மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. இது டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கும் என்பது நிச்சயம். இந்த டேப்லெட்டின் வெளிப்பக்கம் ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளதால் இதை இதை கையில் வைத்துக் கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும்.
இந்த டேப்லெட் தரம் வாய்ந்த ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் வேகம் அதிகமாக இருக்கும். இந்த டேப்லெட்டின் மாதிரி மிக வேகமாக இயங்கியது. அதுபோல் இதில் உள்ள அப்ளிகேசன்களும் மிக அருமையாக வேலை செய்தன. இந்த இஸட்டிஇ டி98 டேப்லெட்டின் விலை மற்றும் அதன் விற்பனைத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் தெரியும் என்று நம்பலாம்.
Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணணி விசைப்பலகையில் அனைத்து special Character-களும் இருக்காது.இத்தகைய Special characterகளை நம் கணணியில் உபயோகப்படுத்துவதற்கு உதவி புரியும் வகையில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் எண்ணற்ற Special character அடங்கியுள்ளது. இந்த Special character அனைத்தும் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு தேவையான Special character மீது கிளிக் செய்தால் அந்த Special character கொப்பி செய்யப்படும்.
இந்த Special characterகளின்
அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது மற்றும் Special characterகளை
Html Code ஆகவும் கொப்பி செய்து கொள்ளலாம்.
இப்படி நூற்றுகணக்கான Special characterகளையும் உங்கள் Document-ல் உபயோகித்துக் கொள்ளலாம்.
டேப்லெட் துறையில் ஆர்க்கோஸ் நிறுவனம் மிக பிரபலமான ஒன்றாக
இல்லாவிட்டாலும் அந்நிறுவனம் சமீபத்தில் சில தரமான டேப்லெட்டுகளை களமிறக்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின்
டேப்லெட்டுகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் பலரும் வாங்கக்கூடிய வகையில் அவை குறைந்த விலையில் இருக்கும். சமீபத்தில் அந்நிறுவனம் ஆர்க்கோஸ் 80 ஜி9 மற்றும் ஆர்க்கோஸ் 101 ஜி9 என்ற இரண்டு டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த டேப்லெட்டுகளில் ஆர்க்கோஸ் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை இண்டக்ரேட் செய்திருக்கிறது. ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தில் இயங்கிய ஜி9 டேப்லெட்டுகளை லாஸ் வேகாஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் ஐஸ் க்ரீம் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட்டு வரும் பிப்ரவரியில் இந்த டேப்லெட்டுகள் சந்தைக்கு வரும் என்று ஆர்க்கோசின் அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர். ஜி9 டேப்லெட்டின் டிஸ்ப்ளே யூனிட் கண்காட்சியில் ஆன்ட்ராய்டு 4.0.1 இயங்கு தளத்தில் இயங்கியது. ஆனால் இது சந்தைக்கு வரும் போது ஆன்ட்ராய்டு 4.0.3. இயங்கு தளத்தில் இயங்கும்.
ஆர்க்கோஸ் 101 ஜி9 டேப்லெட் ஒரு மீடியா சார்ந்த டிவைஸ் ஆகும். அதனால் இதில் இசை, வீடியோ மற்றும் கேம்கள் போன்ற வசதிகள் அம்சமாக இருக்கும். தற்போது இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 ஹன்கோம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஒஎம்எபி 4 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஒரு மினி எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய இணைப்பு வசதிகளை இந்த டேப்லெட் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
இதன் திரை 10.1 இன்ச் அளவு கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்கக்கூடிய கப்பாசிட்டிவ் தொடு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகவும் சென்சிட்டிவிட்டி கொண்டது ஆகும். இந்த ஆர்க்கோஸ் 101 ஜி9 டேப்லெட்டின் விலை ரூ.20,000 ஆகும்.
அடுத்ததாக ஆர்க்கோஸ் 80 ஜி9 டேப்லெட் 8 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. மேலும் இது ஒரு அடக்கமான மற்றும் எடை குறைந்த டேப்லெட் ஆகும். மேலும் இதன் திரை 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்கி மிகவும் பளிச்சென்று இருக்கிறது. இது 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஒஎம்எபி 4 சோக் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஒரு கேமரா மட்டுமே உள்ளது. இந்த கேமரா மூலம் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் சூப்பராக வீடியோ சேட்டிங் செய்ய முடியும். அதுபோல் இந்த டேப்லெட் ஏராளமான ப்ரிலோடட் அப்ளிகேசன்களுடன் வருகிறது.
Animation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். அந்தத் தளத்தின்
முகவரி http://http//textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும். Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும். நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.
இது போல பிக்சர் அனிமேசன் படங்களைப் பெற
www.freegraphics.com/04_Animated_Graphics/ என்ற
தளத்துக்குள் சென்றால் அங்கு பல்வேறு
பிக்சர் அனிமேசன் படங்களைப் பெற 15
தளங்களின் முகவரிகள் உள்ளது.
அவற்றில் www.neoncity.co.uk என்ற
முகவரியிலிருந்து நியான் விளக்குகளான
ஏராளமான அனிமேசன் படங்கள் உள்ளது.
அவற்றிலிருந்து 4 சாம்பிள் படங்கள்
காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment