ஒளிர்வு-(24) ஐப்பசி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,///கனடாவிலிருந்து.......ஒரு கடிதம் /// 2300 களில்மனிதன்/// அது,இது,எது /// சிறையில்....தெய்வங்கள்///ஆன்மீகம்/// "பால் கடல் கடைதல்"///ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/// தொழில்நுட்பம்,!// உணவின்புதினம்,///கணினி உலகம்/// கர்ப்பிணிகளே..!///பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/// உங்களுக்குதெரியுமா?/// ஒன்றிலிருந்து.... ///சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,///சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி
§  குற்றத்தை ஒப்புக் கொண்டாலே,பாதி மன்னிப்புக் கிடைத்து விடும்!
§  வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல,மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை.
§  கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன்,திண்ணியராக எண்ணியதை முடிப்போம்!
§  இதயம் ரோஜா மலராக இருந்தால்,பேச்சில் அதன் நறுமணம் தெரியும்!
§  காதலியை மனைவியாக்கத் துணிவு தேவை,மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!


2 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Wednesday, October 17, 2012

  வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல,மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை.

  ஆமாம் சரியாக சொன்னிர்கள். நல்ல மானிடர் ஆன்மா மரணமெய்தாது என்பது தாங்களறியாததா? இன்றும் கர்ணனன் எம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.அது போலவே வேறு சிலரும் எம்மனதில் இன்னும் வாழ்கிறார்கள்

  மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!

  நற்றிணை 174. பாலை

  "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
  ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
  கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
  புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
  சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,
  பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
  உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!-
  அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
  வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
  மல்லல் மார்பு மடுத்தனன்
  புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?"

  ஆண்பறவை ஒன்று தன் பெண்பறவையை கூவி அழைக்கின்றது.அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழக்கமிடுகிறது.அப்படியான கோடைக்காற்று வீசுகின்ற கடினமான வீதியால் சென்ற உன் காதலர் மீண்டு வந்து உன்னை கட்டிப்பிடித்து இனிதாக நீங்களிருவரும் ஓரிடத்தே ஒன்றாக பிரிக்க முடியாதவாறு இருந்தீர்கள்.ஏன் இப்ப நீ பெரிதும் வருந்துகின்றாய்? என தோழி கேட்டாள். அதற்கு அவள் உண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; என் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டையுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை கொடுத்துவிட்டான் , இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு,கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? இது காதல் கனிவு இல்லாத புணர்ச்சி அல்லவா? எப்படி அவனை நான் உண்மையாக காதலிக்க முடியும்?நான் மனைவி மட்டுமே ..காதலி அல்ல .. என்கிறாள்
  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

  ReplyDelete
 2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, October 18, 2012  * உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால்
  இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்!

  கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக்கூட்டத்தினரிடமும் நான் கருணைக் காட்டினால்...?

  ஒரு கன்னத்தில் அறிந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....
  அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமோ...????

  எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்....

  மீண்டும் மீண்டும்.... எது வரை....??

  மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம்.

  உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???

  ReplyDelete