சினிமா


2012-10-09    இங்கிலீஷ் விங்கிலீஷ்
நடிகர்கள்:- அதில் ஹுசைன்,ஸ்ரீதேவி,ஷிவான்ஸ்கோட்டியா,மேதி.
கதை: - ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்துக்காக கணவனிடமும் மகளிடமும் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்தித்து மனதுக்குள் வெம்பும் ஒரு மனைவி, தாய்..அந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீண்டு, தனக்கான மரியாதையை மீட்டெடுப்பதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.
கருத்து: குடும்பத்துடன் குழந்தைகளும் ரொம்பவே ரசித்தார்கள்.
புள்ளிகள்:-50
2012-10-01    தாண்டவம்
நடிகர்கள்:- விக்ரம்,அனுஷ்கா,நாசர், சந்தானம்,சரண்யா.
கதை: - வழக்கமான பழி வாங்கும் படலம் அடங்கிய கமர்ஷியல் படம்தான்..!
கருத்து: இயக்குனர் விஜய், தாண்டவத்தை எதிர்பார்த்த அளவுக்கு தராதது விக்ரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
புள்ளிகள்:-45
2012-09-26    சாட்டை
நடிகர்கள்:- சமுத்திரகனி, மகிமா,யுவன்,தம்பி ராமையா.
கதை: - தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.
கருத்து: சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை...
புள்ளிகள்:-60
2012-09-19    சுந்தரபாண்டியன்
நடிகர்கள்:- சசிகுமார்,விஜய் சேதுபதி, லஷ்மி மேனன்.
 கதை: -  நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணியும் ஹீரோவின் கதை
கருத்து: குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்
புள்ளிகள்:-50

திரைக்குப் பின்னால்..
 மாற்றான்…. 21 நிமிடங்கள் கட்!
சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான் படத்தின் நீளம் இப்போது 21 நிமிடங்கள் குறைத்து ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றான் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்தன. மேலும் படம் மிக நீளமாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு போரடிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.
படத்தின் நீளம் மொத்தம் 2 மணி 47 நிமிடங்கள். எனவே படத்தில் போரடிக்கும் காட்சிகளைத் தூக்கிவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்தது.
அதன்படி 21 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
வசூல் எப்படி?
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்துக்கு வெகு சிறப்பான ஓபனிங் கிடைத்ததால், உலகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களில் மட்டும் ரூ 19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவிலும் இதுவரை ரூ 2.86 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாம்.
விடுமுறை நாட்கள் அதிகம் உள்ளதாலும், படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாலும் இனி வசூல் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
அடுத்த வருடம் வெளியாகிறது கௌரவம்

டூயட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கௌரவம் படம் அடுத்த வருடம் ஜனவரி 25ம் திகதி வெளியாகும் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்- ராதா மோகன் கூட்டணியில் உருவான மொழி, அபியும் நானும், பயணம் படங்களைத் தொடர்ந்து தற்போது கௌரவம் உருவாகி வருகிறது.
பொதுவாக படப்பிடிப்பு தொடங்கி ஒரு படம் இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என்று தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் சொல்லி வைத்தாற்போல வெளியாவது சிறப்பான விடயமாகும்.
அதேப்போல இம்முறையும், கௌரவம் ஜனவரி 25ம் திகதி வெளியாகும் என்று திட்டவட்டமாக ஒரு திகதியை அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இதற்குக் காரணம், தனது படக்குழுவின் மீதுள்ள நம்பிக்கையே என்று சிரித்தபடியே பிரகாஷ் ராஜ் கூறுகின்றாராம்.
நீர்ப்பறவை படத்தின் பாடல் வரியை நீக்கிய இயக்குனர்

கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி.
இவர், தற்போது மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நீர்பறவை என்ற படத்தை எடுத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற 'பற..பற..' என்ற பாடலில் இடம் பெற்ற வரியினை நீக்குவதாக இவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மனித நேயர், பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, நீர்ப்பறவை திரைப்படத்தில் பற.. பற.. என்கிற பாடலில் இடம் பெற்ற... ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்.. என்கிற சொற்களை நீக்குகிறோம் என்றார்.
சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படம் நீர்ப்பறவை எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக விஷ்ணுவும், நாயகியாக சுனைனாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

22 கோடி சொன்னார்… 42 கோடிக்கு இழுத்துவிட்டுட்டார்!

ரூ 22 கோடிக்கு படம் எடுத்துத் தருவதாக உறுதியளித்துவிட்டு, ரூ 43 கோடி வரை இழுத்திவிட்டுவிட்டார் என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மீது புகார் கொடுத்துள்ளனர் தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள்.
நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் தெலுங்கில் ‘ரெபெல்’ என்ற படத்தை இயக்கினார். பிரபாஸ் – தமன்னா, தீக்ஷா சேத் நடித்தனர். படம் வெளியாகி நல்ல வசூலையும் பார்த்துவிட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பசவான், புல்லாரோ ஆகியோருக்கும், லாரன்சுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
ரூ 22.50 கோடி செலவில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கித் தர ஒப்புக் கொண்ட லாரன்ஸ், ரூ 42 கோடிக்கு செலவை இழுத்துவிட்டதாகவும், பட்ஜெட்டுக்கு மேல் ஆன தொகையை லாரன்ஸ் தங்களுக்குத் தரவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
தயாரிப்பாளர்களுக்கு எதிராக லாரன்சும், இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் தெரிவிக்காமல் படத்தின் டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த சண்டைக்கு காரணமே, படத்தின் தமிழ் உரிமையை தனக்கு எழுதித் தர வேண்டும் என ராகவா லாரன்ஸ் அடம் பிடித்ததுதானாம். ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் உரிமையை தரமுடியாது என தயாரிப்பாளர்கள் கூற, லாரன்ஸ் தன் பங்குக்கு எகிறினாராம். விளைவு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டனர்.


0 comments:

Post a Comment