சந்தானம் – காமெடியிலிருந்து குணச்சித்திரத்துக்கு


img1130414014_1_1
வெறுமனே காமெடி செய்து கொண்டிருந்த சந்தானத்தையும் குணச்சித்திர நடிகராக்கியிருக்கிறாராம் இயக்குனர் சசி.
மூன்று வருடம் ஸ்கிரிப்ட் எழுதி நான்கு வருடம் படப்பிடிப்பு நடத்துகிற சசி பூ படத்துக்குப் பிறகு இப்போதுதான் 555 என்ற படத்தை எடுத்திருக்கிறார். வழக்கமாக மென்மையான உணர்வுகளை கையாள்கிறவர் பரத்தை பாடிபில்டராக்கி வேறு தளத்தில் படத்தை எடுத்திருப்பது புகைப்படங்களிலும், பட ட்ரெய்லரிலும் தெரிகிறது.
இந்தப் படத்தில் சந்தானம் பரத்தின் அண்ணனாக வருகிறார். சிரிப்பைத் தாண்டி படத்தை நகர்த்துகிற குணச்சித்திர நடிகராகவும் சந்தானத்தை சசி பயன்படுத்தியிருப்பதாக கேள்வி. 555 மாதிரி ஊதித்தள்ளுகிறாரா பார்ப்போம்.

0 comments:

Post a Comment