முதல் தர இணைய சேவை வழங்குனர்களான கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவகளுள் ஒன்றாக விளங்கும் கூகுள் மேப் சேவையில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகின் இடங்களை துல்லியமாக அறிக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளமானது 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அவற்றில் Map Maker Editingஎனும் டூலினை இணைத்து அதன் மூலம் பல்வேறு இடங்கள் தொடர்பான தகவல்களையும் பயனர்களே இணைத்துக் கொள்ளக் கூடியதான வசதியினை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் பல்வேறு இடங்கள் தொடர்பான மேலதிக தவல்கள் ஏனைய பயனர்களை இலகுவாக சென்றடையக்கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம் இச்சேவையானது கூகுள் மேப் சேவையோடு இணைந்தது அல்லாமல் வேறாகவே செயற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment