ஆசை+ஆசை...பேராசை

கனவிலும் காசுமரம் 
நாம்பிறந்தநாளிலிருந்தேபலவிதமானஆசைகளைக்கொண்டவர்களாகவேஇருக்கிறோம். முதலில்வர்ணப்பொம்மைக்குஆசை, பின்னர், பலவிதஉடைகளுக்குஆசை, மேல்நிலைக்கல்விக்குஆசை,பெரும்வேலைக்குஆசை, வாழ்வுத்துணைவருக்குஆசை, பெரும்வீட்டுக்குஆசை, பாரியகாருக்குஆசை, மின்னும்பொன்னுக்குஆசை, பேரூர்மண்ணுக்குஆசை, உயரியபதவிக்குஆசை, பெயர்தரும்புகழுக்குஆசை, அளவில்லாப்பொருளுக்குஆசை, அங்கேகிடப்பதும்ஆசை, இங்கேஇருப்பதும்ஆசைஎன்றுஆசைகள்நீண்டுகொண்டேபோகும்.

ஆசைப்படுவதுஒருஅளவுக்குஇருந்தால்ஒருபிரச்சனையும்இல்லை. ஆனால், அதுவாழ்வில்நிம்மதியின்மையைக்கொடுக்கும்பேராசையாய்வளரவிடாதுபார்த்துக்கொள்ளவேண்டும்.
நம்மில்பலர், நம்மிடம்இருப்பதையேஅனுபவிக்காது, நம்மிடம்இல்லாதவைகளை, கிடைக்காதவைகளை, எட்டவேமுடியாதவைகளைநோக்கிஆசைப்பட்டு, கவலையில்மூழ்கிநேரத்தைவிரயம்செய்கிறோம். வைத்திருக்கும்ஐபோனின்எல்லாவசதிகளையும்பாவிக்கும்தேவைஇல்லாமல்இருந்தாலும், மேலும்பலநவீனவசதிகளுடன்புதியபோன்வரும்போதுஓடிச்சென்றுவாங்குவதுபோல, நம்மிடம்இருப்பனவற்றைக்கொண்டுமகிழ்வாகவாழப்பழகஒருபகுதிநேரத்தைஒதுக்கமறுக்கிறோம். நாம்நலமேவாழத்தான்நினைக்கிறோம்; ஆனால்வாழமறுக்கிறோம். நாம்விரும்பியவைஎல்லாம்கிடைக்கவில்லையேஎன்றுஏங்குவதைவிடுத்து, நமக்குவேண்டவேவேண்டாம்என்றுவெறுத்திருப்பவைபல, நம்பால்அண்டாமல்இருப்பதைஇட்டுப்பேருவகைஅடையவேண்டாமா? மனத்தில்முளைக்கும்பேராசைதான்அமைதியின்மைக்குஅத்திவாரம். அதிலிருந்துதான்பலமானதுன்பம்என்னும்கட்டடம்நிர்மாணமாகும்.

ஆசைக்குஒருஅளவுண்டு.
கண்ணால்ஓரளவேபார்க்கமுடியும்; அதிகூடியஒளியோ, இருட்டோகுருடாக்கும்.
வாயால்ஓரளவேபேசமுடியும்; கூடினால், குறைந்தால்ஊமையாக்கும்.
செவியால்ஓரளவேகேட்கமுடியும்; கூடினால்; குறைந்தால்செவிடாக்கும்.
மூக்கால்ஓரளவேமுகரமுடியும்; மீறனால்ஒன்றும்மணம்தோன்றா.
மெய்யால்ஓரளவேஉணரமுடியும், மிஞ்சின்பிரேதத்திற்குச்சமம் .
நாக்கால்ஓரளவேருசிக்கமுடியும், கூடின்நாக்கைஎரித்துவிடும்.
வயிறும்ஓரளவேஉண்ணமுடியும்,  கூடினால், குறைந்தால்இறப்பேநிகழும்.
மூளையும்ஓரளவேகற்கமுடியும்; கல்லாததுஉலகளவுஆகும்.
ஆசையும்ஓரளவேகொள்ளமுடியும், கூடினால்மனம்நிம்மதிஇழந்துதவிக்கும்.
ஆகவே, ஆசைஒருஎல்லைக்குள்நின்றுவிடவேண்டும்.

நாம்சுற்றிச்சுற்றிப்பேராசைஎன்னும்வட்டத்தினுள்மீண்டும்மீண்டும்விழுந்துகொண்டேஇருக்கிறோம்.
நாம்இறந்தவர்களாகவாழ்கிறோம், நம்பேராசைபூர்த்தியாகாததால்!
நாம்பேராசைகொண்டதோ, எல்லாம்எமக்கேஎன்றசிந்தனையினால்!
எல்லாமேஎமக்கானது, மற்றவர்களுக்குக்கொடுக்காமையினால்!
மற்றவர்களுக்குக்கொடுக்கவோ, அப்படிஎம்மிடம்ஒன்றும்இல்லை!
எம்மிடம்ஒன்றுமேஇல்லாததால், எமக்குநாமேகொடுக்கவிழைந்தோம்!
நமக்குநாமேகொடுக்கவிழையும்போது, நாம்ஒருவெறும்மனிதர்என்றுபுரிந்தோம்!
வெறுமனேஉள்ளநாம், கொஞ்சவசதிதேடஆசைகொண்டோம்!
ஆசைகொண்டநாம், வாழவேண்டும்என்றுதிரும்பிவந்தோம்.
திரும்பவும்,
வாழவந்தநாம்இறந்தவர்களாகவாழ்கிறோம், - - - - - -

ஆசைகள்பலபடிநிலைகளைக்கொண்டது. உலகில்ஒவ்வொருபிரிவினரும்தத்தமக்குவேண்டியவிடயங்களையிட்டேஆசைப்படுவர்.
பலர், உடல்முதலியஐம்புலன்களால்உணர்ந்துஅனுபவிக்ககூடியஉடல்சுகம்தேடிஆசைப்படுவர். சிலர், இப்புலன்களையும்தாண்டித்தமதுமனத்தால்உணரும்சந்தோசம்காணஆசைப்படுவர். வேறுசிலர், இந்தச்சந்தோசத்தைதமதுஉள்ளுணர்வுகளோடுஇணைக்கும்அந்தஆனந்தத்தின்பால்ஆசைப்படுவர். மேலும்சிலரோ,  இந்தஆனந்தத்தினூடாகஇறைவனைஉணரும்பரவசத்தின்மேல்ஆசைகொள்வர்.
மொத்தத்தில், எல்லோருமேஆசைகொள்பவர்களாகத்தான்இருந்தாலும், பிந்தியநிலையில்உள்ளபவர்கள்ஆசையின்நிமித்தம்அல்லல்படுவதுகுறைவுகிடையாது.

தெருவில்படுக்கும்தனிப்பிச்சைக்காரன், தன்பக்கத்தில்படுத்திருக்கும்பிச்சைக்காரக்குடும்பத்தின்வாழ்வைப்பார்த்துஆசைப்படுவான். அக்குடும்பமோ, பக்கத்தில்படங்கினால்கூரைபோட்டுப்படுத்திருக்கும்அயலவரைப்பார்த்துஏங்கும். அவர்களோஓலைவீடுஒன்றுஇருந்தால்நல்லதுஎன்றுஏங்குவர். ஓலைவீட்டுக்காரனோ -  - - அப்படியேஆசைவளர்ந்துகொண்டேபோகும்.
சந்தோசம்என்பதுஅவரவர்மனதைப்பொறுத்தது. நாளைகிடைக்கும்என்றுஎதிர்பார்த்துக்கொண்டிருக்கும்ஒருகோடிரூபாவிலும்பார்க்கஇன்றுகையில்இருக்கும்ஒருரூபாதான்உண்மை, நிச்சயம், மேல், சந்தோசம். கோடீஸ்வரன்என்றால்அவன்சந்தோசமாய்இருப்பவன்என்றோ, ஏழைஎன்றால்சந்தோசம்அற்றவன்என்றோஎடுத்துக்கொள்ளமுடியாது.
எல்லாம்அவரவர்மனத்தைப்பொறுத்தது.

ஆக்கம்:செல்வதுரைசந்திரகாசன்


3 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, March 17, 2013

  ஆசை[desire] இன்றி சாதனை ஏது சொல்லுங்கள்!ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை கொண்டால்தான், வெற்றி அடைய முடியும்.பொதுவாகவே ஆசை என்பது ஒவ்வொரு உயிரோடும் ஒன்றிய ஒன்று. நல்ல வழியில் ஒன்றின் மேல் ஆசைப்பட்டு அதை அடைவது என்பதாகும்.ஆனால் பேராசை[greed , greediness] என்பது தீயவழியில் சென்று தீமையை அடைவது.இந்த தீமை,தீயவழி இது பெரும்பாலும் மனிதனையே குறுக்கும்.அது மட்டும் அல்ல ஒரு மனிதன் பேராசையை அவனுல் ஏற்றுக்கொண்டானால் அவனுடைய எண்ணம் முற்றிலும் மாறிவிடும்.
  அதாவது பேராசை வந்தால் மனம் குரங்காய் மாறிவிடும்,ஆபத்துகள் தேடிவரும்.

  தொழிலில் நாம் ஒரு நிலைக்கு வந்துவிட்டோமா? சரி அடுத்து என்ன நிலை என்று ஆசையோடு யோசிப்பதில்தான் நம்முடைய மற்றும் நம்மை சேர்ந்தவர்களுடைய வெற்றி இருக்கிறது..நாம் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து," என நின்று விட்டோம் என்றால், நம்மை சுற்றி இருப்பவர்கள், நம்மை விட்டு விலகி சென்று விடுவார்கள்.

  அது போலவே, கல்வி பயில்வதிலும் கூட ஒரு நிலையில் நிறுத்திவிடக்கூடாது. நாம் கல்வி பயில்வது ஒரு நல்ல வேலை வாய்ப்புக்காகதான். ஒரு நிரந்தரமான நல்ல வேலை கிடைத்தவுடன், கற்பதை மட்டும் நிறுத்திவிடக்கூடாது. வேலையை பார்த்துக் கொண்டே மீண்டும் ஏதாவது ஒன்றை நாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, தொழில் வளர்ச்சி இவை இரண்டும் நாம் உயிர் நின்றால்தான் நிற்க வேண்டும். அதுவரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.இதற்க்கு ஆசை வேண்டும்.இப்படி தான் நான் நினைக்கிறேன்

  குறள் 432
  "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
  உவகையும் ஏதம் இறைக்கு"

  விளக்கம்
  மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்

  ReplyDelete
 2. ஆஸ்தி உள்ளவனுக்கு

  அஸ்தி கரைக்க

  அகர வரிசையில்

  ஆயிரம் பேர்

  ReplyDelete
 3. ஆஸ்தி உள்ளவனுக்கு இறந்தபின் கோடி பேர் தான் சுற்றி நின்று அஸ்தியைக் கரைத்தாலும் அவன் தன வாழ்ந்த காலத்தில் இழந்த சுகங்கள் ஒன்றையும் திரும்பப் பெறப்போவதில்லை.

  ReplyDelete