ஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஐப்பசி முதலாம் திகதியுடன் தீபம் தனது 5 வது அகவையினை அடைந்ததில் தீபத்தின் ஒளி  வளர்ச்சிக்கு நெய்யாகவும்,திரியாகவும் பெரும் கருவிகளாகத் திகழும் எழுத்தாளருக்கும்,வாசகர்களுக்கும் தனது  நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் சஞ்சிகை மகிழ்வடைகிறது. காலம்  கொடுத்த கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் சஞ்சிகையின் வெளியீடு தொடர வழிசமைத்த எழுத்தாள,மற்றும் வாசக நண்பர்களுக்கு சஞ்சிகை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
வாசகர்களை  நோக்கி 5 ஆண்டினைக் கடந்து வந்த பாதையில் மிகவும் பயனுள்ள தகவல் அடங்கிய எமது சஞ்சிகை எவ்வித லாபநோக்கமற்ற இலக்கியப் பயணத்தில் நாளாந்தம் வாசகர்களினது எண்ணிக்கை அதிகரிப்பானது அது வெற்றிப்பாதையில் முன்னோக்கி நகர்கிறது என்பதனை உணரக் கூடியதாக இருப்பதினாலேயே,நாளாந்த வெளியீடுகள் எந்தவித தடங்களுமில்லாது இடம்பெற உற்சாகம் அளித்துக்கொண்டு இருக்கிறது. தொடரட்டும்எழுத்தாளர்கள்,
வாசகர்கள் பங்களிப்பு.வளரட்டும் தமிழ் இலக்கிய உலகம்அனைவரும் வாழ்விலும், வளத்திலும் ஒளி விட்டு மேலும் பிரகாசிக்க  தீபம் தனது தீபாவளி  வாழ்த்துக்களை த்தெரிவித்துக்கொள்கிறது .
...............................................
மேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

* கட்டுரைகள்,
* கவிதைகள்,
* நகைச்சுவை(சிரிப்பு),
* திரைப் பட விமர்சனங்கள்(திரை),
* திரைச்செய்திகள்(திரை),
*தொழில்நுட்பம்,
* உடல்நலம்(உணவு),
*ஆன்மீகம்
* பாடல்
* நடனம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

* " பறுவதம் பாட்டி",(நடப்பு)
* "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்  என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click  http://www.typetamil.in  then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி.
www.theebam.com


0 comments:

Post a Comment