தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:02‏






இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும்,ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை/வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை.எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள்[அனுமானம்],திராவிடர்கள் இந்தியா முழுவதும் அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது.சில பன்மொழியறிஞர்கள்,இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு,திராவிடர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள்.


திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன.இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன.தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.உலகெங்கும் 85 திராவிட மொழிகள் இப்ப உண்டு.பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள்.

நிலம், நீர், காற்று, விண், வளியென கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் 3000-2500 ஆண்டுகளுக்கு முன்  

"நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்"

இப்படி படிப்படியாக உருப்பெற்ற உலகில்,எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே[Homininae] என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக் கொண்டே போய்,இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்[homo sapiens sapiens ,Actually, the root "homo" means "man" and the root "sapien" means "being." So, human being.Modern humans are the subspecies Homo sapiens sapiens] என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன.இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் தான் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்படுகிறது. "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே"[ஓரிடத் தோற்றக் கருதுகோள்] என்ற இந்த மாதிரி மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  விளக்கம் ஆகும்.வெவ்வேறு  நிலவியற் பகுதிகளில் வாழும் மக்களில் இப்ப காணப்படும் வெவ்வேறு உருவ அமைப்பு ,அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கடைசி 60 ஆயிரம் வருடங்களாக படிப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது[பரிணாமம் அடைந்தது என ]

"பல்பிராந்திய"மாதிரி[பல்லிடத் தோற்றக் கருதுகோள்] இரண்டாவது ஆகும்.இது மனிதர்களின் மூதையார்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி,பரவி முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா ,ஆசிய,ஐரோப்பியா பிராந்திய குழுக்களாக தோற்றம் அடைந்தார்கள் என்கிறது.எனவே ஆசிய,ஐரோப்பியா நவீன மனிதர்கள் அதன் பின் ஒரேசமயத்தில் அந்தந்த இடங்களில் பரிணாமம் அடைந்ததாக கருதுகிறார்கள்.[நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என

இதே மாதிரி, போட்டியிட்டுக்கொண்டு பல கருது கோள்கள்,எங்கு எப்போது தமிழ் திராவிடன் தோன்றினான்,பின் எவ்வாறு பரவினான்  என பலதரப்பட்ட கல்விமான்களால் விளக்கம் கொடுக்கப்படுகின்றன ஒரே மாதிரியான மொழியும் பண்பாடும் இரு வேறுபட்ட,ஒன்றோடு ஒன்று எந்த தொடர்பும் அற்ற இரு  இடங்களில் வளர்ச்சி அடைய முடியாது என்பதால்,நாம் ஒரு மாதிரியையே,- "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" என்ற உதாரணம் மாதிரி ஒன்றையே- தெரிந்து எடுக்கவேண்டி உள்ளது.ஆகவே தமிழ் மொழியும் அதனுடன் இணைந்த பண்பாடும் தமிழ் நாட்டிலேயே அல்லது தமிழ் நாடு ,இலங்கை ஆகியவற்றை ஒருமிக்க கொண்ட ஒரு நிலப்பரபிலோ அல்லது இவையை தவிர்ந்த வேறு ஒரு நிலப்பரப்பில் தோன்றி,வளர்ந்து  4000-5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு.இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருத இடம் உண்டு.மேலே கூறிய யோசனை படி பல சாத்தியம் உண்டு.அவை [1]குமரி கண்டம் [2] சுமேரியா[3]சிந்து வெளி நாகரிகம்  [4] ஆஃப்ரிக்கா ஆகும்.
திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் போதாமையால் , இது தொடர்பான சர்ச்சைகள் மேலே கூறிய யோசனைகள் படி  முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என் கின்றனர்.எப்படியாயினும்  ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

ДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДДД

0 comments:

Post a Comment