தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி/PART :31


[தொகுத்தது:கந்தையாதில்லைவிநாயகலிங்கம்]
மெசொப்பொத்தேமியாவில் உள்ள புகழ் பெற்ற நகரமான  உருக்கில் தான் "கில்கமெஷ்" காப்பியம்[“Gilgamesh Epic”]  உருவாகின. இந்த கில்கமெஷ்" காவியத்தில்  என்கிடு[Enkidu] என்ற ஒரு காட்டு வாசிகும் சமாட் [Shamhat] என்ற தேவ தாசிக்கும் இடையில் ஏற்படும் உறவு சில சிற்றின்பப் பாடல்கள் மூலம் வர்ணிக்கப்படுகிறது.சமாட் என்கிடுவை தனது காதல் லீலையால் அவனது முரட்டு மிருக குணத்தை சாந்தப் படுத்தினால்.அவள் தனது ஆடையை நெகிழவிட்டு காமத்தை மூட்டக் கூடியவாறு காட்டின் நிலத்தில் ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதுடன் அந்த காட்சி தொடங்கு கிறது.என்கிடு மிக எச்சரிக்கையுடன் அவளை நெருங்கினான்.ஒரு வேளை அவன் மிரண்டோ அல்லது அவள் அங்கு தைரியமாக பெருமித அழகு வாய்ந்த சிலை போல தன் பெண்மையின் வனப்பை காட்டிக் கொண்டு இருக்கும் அந்த காட்சி கொடுத்த அச்சுறுத்தலாலும் இருக்கலாம்.இப்ப இந்த பாடல் எப்படி சமாட் ,அவனின் இந்த வருகைக்கு முகம் கொடுத்தாள்  என வர்ணிக்கிறது.
"கருத்த மேனியன் மிரண்டு வந்தான்
பருத்த உடலை தூக்கி வந்தான்
அருகில் வந்து எதோ உளறினான்
உருண்டை கண்கள் முறைத்து பார்த்தது 

எடுத்த எடுப்பில் அவனை தழுவினேன்
அடுத்து எந்தன் உடையை நழுவினேன்
நடுங்கும் அவன் தொடையை பற்றினேன்
ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டேன்

மலை சாரலில் மந்தை மேய
மாலை மயக்கத்தில் இருவரும் கொஞ்ச
சேலை காற்றில் பறந்து போக
ஓலை மெத்தையில் இரண்டு ஒன்றானது"   [கில்கமெஷ் 78]
[சொல்லுக்கு சொல் இல்லாமல் ஆனால் மூலக் கருத்தை பிரதி பலிக்கக் கூடியதாக தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
மேலும் அங்கு தான்  "ஈனன்னா துமுழியின் களவொழுக்கம்" [’courtship of Inanna and Dumuzi’ ]என்ற இலக்கியமும் தோன்றின.இதில் ஒரு பாடலை ["நான்,ராணி,நேற்று இரவு, வெளிச்சமாக ஒளி வீசும்  போது," ] ஏற்கனவே தந்துள்ளோம்.இப்ப இன்னும் ஒரு பாடலை பார்க்க உள்ளோம்.அதற்கு முதல் அந்த பாடலின் சூழ்நிலையை பார்ப்போம்.
ஈனன்னவும் துமுழியும்  காதல் கொண்டு,; சிலநாட் பழகிபல நாள் களவொழுக்கத்தில் மறைந்தொழுகி அதாவது இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஈனன்னவும், துமுழியும் ஓரிடத்தில்[தனியிடத்தில்] எதிர்ப்பட்டு,உள்ளம் ஒன்றுபட்டு,   பிறர் அறியாதவாறு மறைவிடத்துக் கூடி மகிழ்ந்து , பின் அவர்களின் இந்த   ஐக்கியம் மனைவி,கணவனாக அவர்களை கொண்டு சென்றது.இந்த நிகழ்வு வருடாந்த விழாவாக நாளளவில் ஆயிற்று.இந்த பண்டைய  பாடல்,அன்றைய மக்களின் பாலியல் தொடர்பான அவர்களின் உட்பார்வையை தருகிறது.
ஒரு நாள்,துமுழியின் சகோதரி,கெஷ்டினன்ன[Geshtinanna],ஈனன்னவை சந்தித்த பின் அவளை தனது வீட்டிற்கு அழைத்தாள்.அங்கு அவள் துமுழியை  கண்டாள்.அவனின் அழகும் தோற்றமும் அவளை மகிழ்ச்சியடைய செய்தது.இதை கவனத்த கெஷ்டினன்ன தன் சகோதரன் துமுழியிடம் அவனின் வாலிப கட்டமைப்பில் அவள் மனம் பறிகொடுத்து இருப்பதை கூறி,மேலும் அவள் அவனை சந்திக்க துடிப்பதையும் கூறினாள்.துமுழி அவளை முற்ற வெளி ஒன்றில்  சந்தித்து அவளை அவளின் குடியிருப்பில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் வெளியே வர தூண்டினான்.அப்படி தூர வந்தால் அந்த தனிமையில் அவளை இலகுவாக காதல் வசப்படுத்தலாம் என கருதினான்.என்றாலும் ஈனன்னா[ Inanna] வீட்டில் இருப்பதையே விரும்பினால் மேலும் வீட்டிற்கு பிந்தி வருவதையும் விரும்பவில்லை.ஆகவே அவன் அவளை 'தான் தனது தோழியுடன் இசை மீட்டும் பாடியும் நேரத்தை களித்தேன்.அது மிகவும் மகிச்சியாக இருந்ததால் நேரம் போனது தெரிய வில்லைஎன ஒரு பொய் சொல்ல சொல்கிறான்.இதைத்தான் முன்னைய பாட்டில் பார்த்தோம்.அப்படியானால்,துமுழி இனிமையான , தூய்மையான படுக்கை ஒன்றை விரித்து அவளுடன் காதலில் இன்புற்று இருக்க முடியும் என்பதால் ஆகும். அவர்களின் இந்த முதலாவது சந்திப்பின் பின் ஈனன்னா .துமுழியை,தனது இதயம் கவர்ந்த நாயகனாக காதலித்தாள்.அது அவர்களின் காதல் கூடலுக்கு வழிசமைத்தது
ஈனன்னா கூறினாள்
"நெஞ்சை பறித்தவன் என்னை சந்தித்தான்
பஞ்சனை மயக்கத்தில் இருவரும் மகிழ்ந்தோம்
தஞ்சம் அடைந்தவளில் சந்தோசம் கண்டான் 

மஞ்சள் நிலாவில் வீட்டிற்கு அழைத்தான்
மஞ்சத்தில் என்னை அழகாய் கிடத்தினான்
அஞ்சா நெஞ்சன் ஒன்றாய் படுத்தான்

கொஞ்சி கொஞ்சி இன்பத்தில் பூத்தான்
வஞ்சனை முகத்தால் முத்தங்கள் தந்தான்
மஞ்சத்தில் ஒன்று, பத்து, ஐம்பது தந்தான்

நஞ்சு தந்த போதை மயக்கத்தில்
வஞ்சி வீரன் காதில் சொன்னான் 
கொஞ்சம் என்னை தனியாய் விடு

செஞ்ச தெல்லாம்  செய்து விட்டு
கெஞ்சி என்னை கட்டி அழைத்தான்
எஞ்சிய நேரத்தை அரண்மனையில் கழிக்க

0 comments:

Post a Comment