சொர்க்கமும், நரகமும்


நீ நரகத்திற்குத்தான் போவாய்!,எனப் பயமுறுத்தும் அல்லது  இப்படி நடந்தால் நீ சொர்க்கத்திற்குத்தான் போவாய் என ஆசைகாட்டும்  குரல்களை மட்டும் பொதுவாக அனைத்து மத வாதிகளிடமிருந்தும் ஒலிக்கக் கேட் கிறோம்.
வீட்டில் ஒரே தொல்லை என்றால் வெளியில் எங்காவது சிலமணி நேரம் செலவிட எண்ணும் மனிதன் இன்று செவ்வாயில் குடியேற முடியுமா என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றான் எனில் பூமியில் அவனுக்கு வாழப் பிடிக்கவில்லையா? அதாவது  பூமிதான் நரக லோகம் என முடிவே செய்துவிட் டானா?
பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பூமி நில நடுக்கம்,எரிமலை,சூறாவளி, சுனாமி இவற்றினைக் கொண்டிருக்கவில்லை என்பதுவும், மனிதனின் வாழ்க்கைமுறையில் ஏற்பட் ட  பாரிய விஞ்ஞான மாற்றம் மேற்படி இயற்கை அனர்த்தங்களுக்குக் காரணம் எனவும் அவ்வப்போது கசியும் ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் புவியைக் கெடுத்தது போதாது என்று செவ்வாயையும் கெடுப்பதற்கு கண்ணை வைத்திருப்பது அதி சிந்தனையாகத் தோன்றுகிறது.சொந்த வீட் டைக் கவனிக்க துப்பில்லாதவன் வெளியில் மாளிகை கட்டிட திட்டம் இடும் கதை வேறு.
நாம் தலைப்பிற்கு வருவோம்.
மனிதர்கள் ,அவர்களுடைய எதிர்பார்ப்புகள், சிந்தனைகள், இரசனைகள், கருத்துக்கள், ஒவ்வொருவ ர் களுக்கிடையே  பெரும்பாலானவை வித்தியாசம்,வித்தியாசமாகவே இருக்கின்றன. அதனை ஏற்றுக்கொள்ளாத  மனிதர் இருவர் இல்லறத்தினுள்  இணையும் பொது பிரச்சனைகளைச் சந்திக்கிறான்.அல்லது அலுவலகத்தில் இணையும்போது பிரச்சனைகளைச் சந்திக்கிறான். இவர்கள் வாழ்க்கையினில் தாங்களாகவே நரகலோகத்தினை நிர்மாணித்துக் கொள்கிறார்கள்.
ஒரு மனிதன் தன்   சிந்தனைகளோடு,கருத்துக்களோடு ஒத்துப்போகக்கூடிய சூழ்நிலையினை தனது திறமைகொண்டு உருவாக்கி  திருப்தியுடன் வாழும்போது தான் சொர்க்கத்தினை அனுபவிக்கிறான். அதுவே அவனுக்குச் சொர்க்கம்.
எல்லாவற்றிற்கும் ஒத்துநடவாது சினமடைந்து ,காரியங்களைக் கெடுத்து வாழ்ந்தால் அவன் நரகலோகத்தினை அனுபவிக்கிறான்.
அதாவது, சொர்க்கத்தினையும் , நரகத்தினையும் மனிதனே உருவாகிறான். அவை ஒன்றும் அதி தூரத்தில் அல்ல.

அரங்கில் ஒலித்ததில் கேட்டது : செ .மனுவேந்தன்.

0 comments:

Post a Comment