சினிமா செய்திகள்


விக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை'

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லபடத்தை இயக்கியவர் தினேஷ்செல்வராஜ். இவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகிஇருக்கும் படம் `துப்பாக்கி முனை.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தணிக்கைக் குழுவில் துப்பாக்கி முனை  படத்திற்கு யு சான்றிதழ்
கிடைத்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமானபோலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வலம் வருகிறார்.

மிகவும் முக்கியமான வழக்கு குறித்து விசாரிக்கும்  விக்ரம் பிரபு சந்திக்கும்மாற்றம் மற்றும் பிரச்சினைகளே படத்தின்  கதையாக  அமைக்கப்பட்டுள்ளது.வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.


மீண்டும் நடிக்க ஆசை
தமிழ் திரையுலகில் முன்னாள் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகைலைலாமுன்னனி நடிகர்களூடனும் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான லைலா தற்போது மீடூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:

மீடூ விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .சமுதாயத்தில் இந்த அக்கிரமத்துக்கு முடிவு காண வேண்டும் என்ற நோக்கில் பெணகள் ஓரணியில் திரள்வது நன்மையளிக்கக்கூடியதாகும். எல்லா துறைகளிலும் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது வியப்பாக உல்ளது.

எனக்கு மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.எனகேற கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


'அகத்திணை'
2015 இல் வெளிவந்து பலருடைய சிறந்த கருத்துக்களை பெற்ற  ஒரு திரைப்படம் 'அகத்திணை'. [நடிகர்:வர்மா, நடிகை; மகிமா நம்பியார் ]. இன்றைய திரைப்படங்களை ஆக்கிரமித்திருக்கும் வழமையான .குத்துவெட்டுக்களோ , படு கவர்ச்சியான கும்மாளங்களோ இன்றி தந்தை மகள் பாசம், விசுவாசமான வேலைக்காரனுக்கு மிடையில் நடக்கும் போராட்டத்தினை இயக்குனர் சிறப்பாக வழங்கி நீண்ட காலத்தின் பின்னர் ஒரு சிறந்த பண்பாடுள்ள திரைப்படத்தினை வழங்கியிருக்கிறார்எனவே இத்திரைப்படத்தினை எமது வாசகர்களுக்கு நினைவூட்டுவதில் பெருமை அடைகிறோம். அதனைப் பார்த்து இரசிக்க youtupe தளத்தினை அடையலாம்.

🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦🎦

0 comments:

Post a Comment