உன்னைக் கண் தேடுதே

போகும் இடமெல்லாம் உன் நினைவு,
நெஞ்சுக்குள்ளே தீயாக வீழ்ந்து வேகுதே
இன்னும் ஆயிரம் இன்னல்கள் ஏனடி..
பாசம் கொண்டு  என்னை  வளைத்துவிட
உன் அழகிய காதல் வில்லில்
அகப்பட்டு  உன்னை  சுற்றி வர
நீதான் எனக்கு காட்சி தந்தாய்
இப்போ மட்டும் ஏனடி மௌனம் கொண்டாய்
வாலிப வயதினிலே காதல்பார்வை சிந்திவிடவே
இளமையின் புன்னகை சுகமாக மலர்ந்ததுவே
தொட்டு செல்ல வந்த தென்றலும்
தெம்மாங்கு பாடியே விட்டு சென்றது
உள்ளத்திற்கும் உயிர்க்கும் இனிமை வர
விதியாய் வீழ்ந்து இருந்து உன்னில்
காதல் சுவையூற‌
களிப்பொங்கல் .பொங்கியே
இன்பம் கண்டு கனவுகளை வளர்க்க!

-காலையடி,அகிலன்.

0 comments:

Post a Comment