சினிமாச் செய்தித் துளிகள்


இயக்குநர் சுசீந்திரனின் 'சாம்பியன்'!

'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை சுசீந்திரன் கடைசியாக இயக்கி இருந்தார். இதைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் 'சாம்பியன்'. கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவுடைந்த நிலையில், டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. படம் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
'சாம்பியன்' படத்தில் புதுமுகம் ரோஷன் ஹீரோவாகவும்,  டப்ஷ்மாஷ் புகழ் மிருனாலினி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.  


கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி
 
கவுதம் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் `தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். 
`தேவராட்டம்' படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்தார்.
விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் இருவரும்ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒயிட்லைன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அன்பு தயாரிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு
 
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான `இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ், கருணாகரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் காலத்தை கடந்து பயணிக்கும் (Time Travel) கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது.
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே..ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார்.

இதையடுத்து படத்தில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா என்று நடிகர் விஷ்ணு விஷால் கேட்டதற்கு பதில் அளித்த சி.வி.குமார், நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி? என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.


இரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை
   
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும்சர்கார்படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்துள்ளது.
விஜய் நடிப்பில் .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியானது.

இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. டீசர் வெளியான பத்து நிமிடத்தில் 10 லட்சமும் பார்வையாளர்களும், 20 நிமிடத்தில் 20 லட்சமும், 35 நிமிடத்தில் 30 லட்சமும், 55 நிமிடத்தில் 40 லட்சமும், 75 நிமிடத்தில் 50 லட்சமும், 1 மணி 50 நிமிடத்தில் 60 லட்சமும், 2 மணி 30 நிமிடத்தில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்து சாதனை படைத்துள்ளது.
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

0 comments:

Post a Comment