காவலிடு


 நாவுக்கு ………

                        உண்மையென உரைத்திடும்
உணர்ச்சியான உரைகள்.
தீயாக சுட்டுவிடின்
தீர்ந்துவிடும் பாசம்.
கொல்லாமல் கொல்லும்
கொடுமையான தொல்லையே
காவலிடு நாவுக்கு
காலமெலாம் நலமாமே!


↳தங்கம் போல எண்ணங்களில் ↲
தங்கம் போல எண்ணங்களில் .
வண்ணங்களை அமைத்து .
உலகம் போற்ற உயர்ந்துவிடு
வெறுமைகளும் வெகு தூரம் சென்று
வெகுமதியை கொண்டுவந்துவிடும்
உலகை குற்றம் சொல்லி
தேடாமல் இருந்து
வாழ்வதனை தொலைத்து
சுமையை சுமைக்காதே
காற்றோடு கலந்து பறக்கும்
தூசுகள் போல வாழாது
உன் மனமும் எப்போதும்
உன்னை வாழ்த்தி நிற்க
உலகம் போற்ற உயர்ந்துவிடு
வடுக்களையும் மறைய செய்து
விதியின் விளையாட்டையும்
வென்று விடலாம்!
✍✍: காலையடி,அகிலன்.

0 comments:

Post a Comment