பொன்னான காலம்படர்ந்துகிடக்கும்  உலகை
சுற்றி வந்தாலும்
சற்று வியந்து
மயங்கி நின்றாலும்
வசந்த காலம் பொன்னான காலம்.
அக்காலம் வாழ்வெல்லாம்
 இனிமை பொழிந்தகாலம்
சிந்தனையின்றி மகிழ்ந்தவண்ணம்
உலாவிய வெள்ளிக்காலம்
நித்தம் நினைக்க
 ஏங்கும் காலம்.
சிறுபருவம் தன்னில்
 சண்டை போட்டு
அக்கம் பக்கம் பேசாமல்
கோவத்துடன் இருந்தாலும்
தவறுகளை தீர்த்துவிட
மீண்டும் பூப்பூக்கும் மனங்களில்
மலர்ந்துவிடும் ஒற்றுமை நட்பு
வண்ணம் இன்றி
 புதுமை தந்த காலம்
வியந்து பார்ப்பதற்கு வளைத்து
விடும் காலம்
அதுவே வசந்தகாலம்.

- காலையடி , அகிலன்.


0 comments:

Post a Comment