காதல் கனவே கலையாதே

காதல் கனவே கலையாதே
காய்ந்த சருகின் விறகாய்
மாறாதே
காதல்  பூத்து மனக்கவே
கண்விழி  திறந்து  வாராயோ
காதல் வைத்த   விழிகள்
கணப்பொழுதும் நொந்து
காயம் கண்டு போவதா
காதல்விழும் முன்னாலே
பாசம் காட்டி சுவை தா  காதலே
பால் தயிராக தூங்கிவிட்டாள்
பாலின் சுவை அறியமுடியுமா
கற்பனயை விற்றுவிட்டால்
காதல் சுவையும் கரைந்து போகுமே
கானல் வேண்டாமே காதலே
காதல் கருப்பைக்குள் கூடு காட்டி
காதல் குழந்தையை வளர்த்து
காதலால் மலர்ந்துவிடவே
காலமெல்லாம் காதலே வந்துவிடு
சிறையில் சிக்கியிருந்த
காதலையும் விடுவித்துவிடு
ஓடி வந்தே அணைக்கட்டும்
காதல் கனவே கலையாதே!

✎✎✎✎✎ஆக்கம்:காலையடி,அகிலன்✎✎✎✎✎.

0 comments:

Post a Comment