சினிமாத் துளிகள்


சிவகார்த்திகேயனின் அடுத்த படம் 

ராஜேஷ். எம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்து வரும் புதிய படத்திற்கு மிஸ்டர். லோக்கல் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
 இந்த படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படமாகும்.

வளரும்செந்தில் கணேஷ்

 விஜய்டிவி புகழ் செந்தில் கணேஷ், ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை அடுத்து தற்போது உருவாகி வரும்இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டுஎன்ற படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செந்தில் கணேஷ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வந்து குவிகின்றன. செந்தில்கணேஷ், ஏற்கெனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் திரைப்படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். அவருடைய புகழ் பெற்ற பாடலானசின்ன மச்சான் செவத்த மச்சான்பாடல் சமீபத்தில் வெளியானசார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்று நல்ல வரவேற்பை பெற்றது
இந்த நிலையில்கபாலிபடத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் படம்இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.இந்த படத்திலும் செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சந்தானத்தின் படம் 

 தில்லுக்கு துட்டு என்ற சந்தானத்தின் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு 2 என்ற பெயரில் ராம் பாலாவின் இயக்கத்தில் சந்தானம் கதாநாயனாக ஷ்ரதா சிவதாஸ் நாயகியாக இணைந்துள்ளார்.முற்றிலும் நகைச்சுவை கலந்த பேய்க் கதையாக இருக்கும் என அறியப்படுகிறது.

தொகுப்பு: கயல்விழி , பரந்தாமன் 


0 comments:

Post a Comment